Font Help?

Biyernes, Oktubre 06, 2006

19. அமெரிக்காவில் ஒரு புனித பிம்பம்

சென்ற மாதம் ஓர் வடநாட்டவர் நடத்தும் விடுதியில் ஒருவாரம் தங்கியிருந்தேன். நான் நீண்ட நாட்கள் தங்கியிருப்பவன் என்பதாலும் இந்தியன் என்பதாலும் எப்போதும் அவருக்கு அதிக வேலையில்லா மாலைவேளைகளில் இருவரும் பொதுவான எதைப்பற்றியாவது பேசிக்கொண்டிருப்போம். பெரும்பாலும் அமெரிக்க வாழ்க்கையை பற்றி அல்லது அமெரிக்க நடப்புகளை(ஒரு கொசுறு செய்தி: அமெரிக்காவின் சிறு விடுதிகளில்(மோட்டல்) 65% இந்தியர்கள் கையில் உள்ளதாம்) பற்றியே சென்ற பேச்சுக்கள் அன்று இந்தியா பக்கம் திரும்பியது.

முதலில் இந்தியாவின் சமூக அக்கறையின்மை பற்றியதான பேச்சு பின்பு பொருளாதாரம் பற்றி திரும்பியது. இந்தியாவில் பெரும்பாலும் பணக்காரர்கள்தான் அதிக பணக்காரர்கள் ஆகிக்கொண்டிருக்கிறார்கள் ஏழைகள் மிக ஏழைகளாகிக்கொண்டிருக்கிறார்கள் என்று சமூகத்தை வசைபாடிக்கொண்டிருந்தார். அதற்கான காரணம் அரசாங்கமென்றும் சொல்லிக்கொண்டிருந்தார். நான் அதிகம் கேட்டுக்கொண்டிருந்தேன்.

இப்படியாக சென்று கொண்டிருந்த பேச்சினிடையே "இப்போது பாருங்கள் தேவையில்லாமல் இடஒதுக்கீடு என்று தேவையில்லாமல் நாட்டின் முன்னேற்றத்தை தடுக்கிறார்கள்" என்றார். அட நம்ம பக்கம் வர்ராரே என்று சுதாரித்து "ஏங்க இடஒதுக்கீடு தப்பா" என்றேன். பின்ன தகுதியில்லாதவர்கள் வேலைக்கு வந்தால் நாடு எப்படி முன்னேறும் என்று ஆரம்பித்தவர் அதுபற்றியும் ஒரு பாட்டம் பேசித்தீர்த்தார். இடஒதுக்கீடு இல்லையென்றால் அவர்களை வேறு எப்படி முன்னேற்றுவது என்றால் அதற்கு பதிலில்லை. ஆனால் இடஒதுக்கீட்டை ஏற்கனவே அனுபவித்தவர்களே அனுபவிப்பதும் அந்த இடங்கள் காலியாக இருப்பதும்தான் பெரிதாக இருக்கிறது அவருக்கு. ஏற்கனவே இடஒதுக்கீட்டில் வேலைக்கு சேர்ந்தவர்கள் எத்தனை சதம் இன்னும் வாய்ப்பு கிடைக்காதவர்கள் எவ்வளவு பேரென்பது அவருக்கு கவலையில்லை. இந்தியாவில் எந்த திட்டம் நூறு சதவீதம் முழுமையாக நடக்கிறது ஆனால் இதற்கு மட்டும் ஏனிந்த ஆரவாரம் என்பதற்கும் விடையில்லை. அவர்கள் தலைமுறைகளாக அடிமைப்பட்டிருப்பது பற்றிகவலையில்லை. ஆனால் இன்று ஒரு தலித்மாணவனைவிட ஒருமதிப்பெண் அதிகம் பெற்றும் இடம் கிடைக்காவிட்டால் அது இந்தியாவின் முன்னேற்றத்தையே தடுக்குமாம். இத்தனைக்கும் கொஞ்சம் முன்புதான் இந்தியாவின் கல்விமுறையப் பற்றியும் கவைக்குதவாத மதிப்பெண்கள் இடத்தை நிர்ணயம் செய்வதையும் சொன்னார்.

அவர் சொன்ன ஒவ்வொரு காரணத்திற்கும் பதில் சொன்னேன் (எல்லாம் பாதி வலைப்பதிவு உபயம்). என்ன நடந்திருக்கும் என்று நினைக்கிறீங்க. அதன் பிறகு எங்கள் மாலை சந்திப்பு முடிவுக்கு வந்தது :-))

இப்படியாகத்தான் நாம் புனித பிம்பங்களாகவே வளர்ககப்படுகிறோம். தலையை மண்ணுக்குள் புதைத்துக்கொண்டு மாற்று கருத்தை சற்றே திரும்பி பார்க்கக்கூட விரும்புவதில்லை. ஒவ்வொருவர் முதுகிலும் புனிதமென்று பெரும் அழுகலை முதுகில் சுமத்தப் பட்டிருக்கிறது . ஊடகங்களும், "பெரியவங்களும்" இதை செவ்வனே கட்டமைக்றார்கள். எதிர்த்து கொஞ்சம் பேசினாலும் நீங்க "ரவுடியாக" பார்க்க படுவீர்கள். நானும் கல்லூரி காலத்தில் இப்படியான புனிதனாக யோசித்துக்கொண்டிருந்தவன் தான். இன்று திரும்பி பார்க்கையில் எல்லாம் வேடிக்கையாக தோன்றுகிறது. ஆனால் இன்னும் முழுமைபெறவில்லை. கழுவ வேண்டியது இன்னுமிருக்கிறது.

இன்னும் எனக்கு, என்பிள்ளைகளுக்கு, எனக்கு தெரிந்தவர்களுக்கு இடஒதுக்கீட்டால் இடம் கிடைக்கவில்லை / கிடைக்காமல் போக போகிறது என்பதால் மட்டும் இதை எதிர்ப்பவர்கள்
ஒருமுறையேனும் எதிர்புறத்தை பார்க்கமுடியுமா. அதற்காக இரட்டை தம்ளருக்கு பதில் பிளாஸ்டிக் தம்ளரை பற்றி யோசிக்க சொல்லவில்லை. இரண்டாவது தம்ளரில் நீங்கள் குடிப்பதாக நினைத்து இதை பற்றி யோசிக்க முடியுமா. மேலாக்கை கூட நீக்கி உலவ விட்ட வக்கிரம் பிடித்த இந்த சமுதாயத்தில் இப்படியாக வரும் ஒருசில சிறு கொழுக்கொம்புகளை எதிர்த்து முனகக்கூட யாருக்கும் அருகதையில்லை.

இது வலைப்பூவின் புனித பிம்பங்களின் மனசாட்சிக்கு ஒரு கேள்வி. உங்களுக்கு ஆகாமல் போனதலும் இவனெல்லாம் நமக்கு சரியாக வருகின்றானே என்றும் தானே இடஒதுக்கீடு, திராவிடம் இதையெல்லாம் எதிர்க்கின்றீர்கள். நேர்மையான பதிலை இங்கு சொல்ல வேண்டாம். வலைப்பூவில் அடுத்தமுறை தேசியம், தகுதி என்றெல்லாம் ஜல்லியடிக்கும் போது உங்களுக்குள் சொல்லிப்பாருங்கள்.

28 Comments:

Blogger கோவி.கண்ணன் [GK] said...

சோழா ..!
ஒரு + குத்து !

Biy Okt 06, 04:50:00 AM GMT-4  
Blogger Muthu said...

நல்ல பதிவு சோழநாடன்.

தன்னுடைய நிலையை தக்க வைப்பதுதான் இங்கு பலபேருக்கு கொள்கையாக இருக்கிறது.

செய்திதாளை படித்துவிட்டு அப்படியே அதை தம் கருத்தாக அடித்துவிடுவார்கள்.துக்ளக் படித்துவிட்டு அடித்துவிடுவதும் உண்டு.

Biy Okt 06, 05:02:00 AM GMT-4  
Blogger Muthu said...

கோவி.கண்ணன்
நன்றிங்க.

முத்து(தமிழினி)
அதேதான். அதை மறைக்கத்தான் மற்ற ஜல்லிகளெல்லாம்.

Biy Okt 06, 05:17:00 AM GMT-4  
Anonymous Hindi-nagpakilala said...

இட ஒதுக்கீட்டினை எதிர்ப்பவர்கள் எல்லோரும் பிற்போக்கு கருத்துடையவர்கள்
அல்ல.வெறும் ஜாதிய அடிப்படையில்
அது இருப்பதை எதிர்ப்பதில் என்ன தவறு.ராமதாஸின் பேரன்களுக்கும்,
கருணாநிதியின் பேத்திகளுக்கும் இட ஒதுக்கீடு தேவையா

Biy Okt 06, 05:22:00 AM GMT-4  
Blogger Muthu said...

அனானி,
என் கேள்வி இதுதான்.
ராமதாஸ்க்கும், கருனாநிதிக்கும் எத்தனை பேரன்கள் இருக்கிறார்கள். அந்த ஒரு சிலருக்காக மற்ற அனைவரையும் கீழேயே வைத்திருக்க வேண்டுமா? இந்த திட்டத்தில் கொஞ்சம் ஓட்டை இருக்கலாம். இந்தியாவில் ஓட்டையில்லாமல் 100% முழுமையாக உள்ள திட்டம் எதுவென்று சொல்லுங்கள். பின்புறகதவுகளை அடைக்கவேண்டுமென்றால் இதற்கு முன் மூட வேண்டிய கதவுகள் நிறைய இருக்கிறது. முதலில் அதை மூடிவிட்டு பின்பு இங்கு வரலாம்,

Biy Okt 06, 05:35:00 AM GMT-4  
Blogger Krishna (#24094743) said...

//தன்னுடைய நிலையை தக்க வைப்பதுதான் இங்கு பலபேருக்கு கொள்கையாக இருக்கிறது.//

இதில் என்ன தவறு கண்டீர்கள்? இல்லை நீங்கள் அனைவரும் செய்வது/சொல்வது இதிலிருந்து எப்படி மாறுபட்டது? அவரவர் கருத்து அவரவருக்கு உயர்ந்தது. கொண்ட கருத்தின் உயர்ச்சிக்கு உழைப்பதை விட்டு விட்டு, அவன் கருத்து நொள்ளை, இவன் கருத்து நொண்டி என்று ஏன் பதிவிட வேண்டும்?

Biy Okt 06, 05:42:00 AM GMT-4  
Blogger ஜடாயு said...

மாற்றுக் கறுத்தை எதிர்கொள்வதன் தாக்கத்தை சகிக்கத் திராணியில்லாதவர்கள் இப்படி பேசாமல் திடீரென்று பின்வாங்குவது தெரிந்த்து தான். இதை எல்லா "கேம்ப்" ஆட்களிடமும் பார்க்கலாம். மார்க்சிஸ்டுகள் மட்டும் புனிதப் பிம்பங்களை உருவாக்கவில்லையா என்ன?

இட ஒதுக்கீடு பற்றி: எதிர்ப்பவர்கள் அல்லது மாற்றுக் கருத்து சொல்பவர்கள் எல்லாரும் மனசாட்சி இல்லாதவர்கள் என்றெல்லாம் ஒரேயடியாக அடிக்கலாமா சோழநாடன் அவர்களே?
இது பற்றி திண்ணையில் நான் எழுதியதை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன் -
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20606308&format=html

Biy Okt 06, 05:43:00 AM GMT-4  
Blogger Muthu said...

Krishna
மற்றவர்கள் என் காலுக்கு கீழேதான் இருக்க வேண்டுமென்ற கொள்கை வைத்திருப்பவரிடம் அதை விமர்சிக்காமல் என்ன செய்வது. இதைத்தான் கொள்கைகளை கொஞ்சம் நேர்மையும், சமூக அக்கறையும் கலந்து மீள் பரிசோதனை செய்ய சொன்னேன்.

Biy Okt 06, 05:57:00 AM GMT-4  
Blogger Krishna (#24094743) said...

//ராமதாஸ்க்கும், கருனாநிதிக்கும் எத்தனை பேரன்கள் இருக்கிறார்கள். அந்த ஒரு சிலருக்காக மற்ற அனைவரையும் கீழேயே வைத்திருக்க வேண்டுமா?//

மிகவும் நியாயமான கேள்வி. இதையே தான் பொதுவாக பலரும் சொல்கிறார்கள். இவர்கள் போன்றவர்களை (பொருளாதாரத்தில் முன்னேறிவிட்ட அனைவரையும்) விலக்கி விட்டு இட ஒதுக்கீடு செய்யுங்களேன்? எது உங்களைத் தடுக்கிறது?

Biy Okt 06, 05:57:00 AM GMT-4  
Anonymous Hindi-nagpakilala said...

You are right. upper class never worried about India. Tamils fight for Social justice in Sri Lanka.
But we fight to suppress our own Citizens in India.

Biy Okt 06, 06:00:00 AM GMT-4  
Blogger Muthu said...

////
மார்க்சிஸ்டுகள் மட்டும் புனிதப் பிம்பங்களை உருவாக்கவில்லையா என்ன?
////
எனக்கு விமர்சனமில்லா எந்த புனித பிம்பங்களும் ஏற்புடையதல்ல...

திண்ணைக்கு வந்து வெகு நாளாயிற்று. உங்கள் கட்டுரையை படித்து விட்டு பிறகு கருத்து சொல்கிறேன்.

Biy Okt 06, 06:01:00 AM GMT-4  
Blogger Muthu said...

krishna,
////////
இவர்கள் போன்றவர்களை (பொருளாதாரத்தில் முன்னேறிவிட்ட அனைவரையும்) விலக்கி விட்டு இட ஒதுக்கீடு செய்யுங்களேன்? எது உங்களைத் தடுக்கிறது?
////////
இது மூடவேண்டிய பின்புற வாசல் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இதற்குதான் "பின்புறகதவுகளை அடைக்கவேண்டுமென்றால் இதற்கு முன் மூட வேண்டிய கதவுகள் நிறைய இருக்கிறது. முதலில் அதை மூடிவிட்டு பின்பு இங்கு வரலாம்" என்று சொன்னேன்.

Biy Okt 06, 06:06:00 AM GMT-4  
Blogger Muthu said...

அனானி,
//
Tamils fight for Social justice in Sri Lanka
//

நாமும் அதேதான். ஆனால் களமும், முறையும் வேறு

Biy Okt 06, 06:09:00 AM GMT-4  
Blogger ஜோ/Joe said...

ஒரு + குத்து!

Biy Okt 06, 06:18:00 AM GMT-4  
Blogger Muthu said...

நன்றி ஜோ

Biy Okt 06, 06:23:00 AM GMT-4  
Anonymous Hindi-nagpakilala said...

//இது மூடவேண்டிய பின்புற வாசல் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இதற்குதான் "பின்புறகதவுகளை அடைக்கவேண்டுமென்றால் இதற்கு முன் மூட வேண்டிய கதவுகள் நிறைய இருக்கிறது. முதலில் அதை மூடிவிட்டு பின்பு இங்கு வரலாம்" என்று சொன்னேன்.//

இது இப்போது கட்டும் வீடு, பழைய மறாமத்து பார்க்கும் காண்ட்ராக்ட் தனியாக தரப்படும், அப்போது அந்த பழைய கதவுகளை எடுத்துவிட்டு சுவர் வைத்து மூடலாம்....இது புதுவீடு, இதில் குடிபுகும் முன்பே இந்த கதவினை வைக்காதீர் என்பது தவறா?

Biy Okt 06, 06:51:00 AM GMT-4  
Blogger குழலி / Kuzhali said...

//அவர் சொன்ன ஒவ்வொரு காரணத்திற்கும் பதில் சொன்னேன் (எல்லாம் பாதி வலைப்பதிவு உபயம்).
//
இது வெகுசன ஊடகத்திலும் பரவ வேண்டுமென்று ஆசைப்படுகின்றேன்.

நன்றி

Biy Okt 06, 07:00:00 AM GMT-4  
Blogger Muthu said...

/////////
இது புதுவீடு, இதில் குடிபுகும் முன்பே இந்த கதவினை வைக்காதீர் என்பது தவறா
/////////

இது மட்டுமே உன்மையான நோக்கமாக இருந்து வேறு ஏதேனும் Hidden agenda இல்லையென்றால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் பெரும்பாலும் எதிரான குரல்களில் அப்படியேதும் தெரியவில்லையே.

Biy Okt 06, 07:03:00 AM GMT-4  
Blogger Muthu said...

கண்டிப்பாக குழலி,
என் பல எண்ணங்கள் வலைப்பதிவுகளால் சுயபரிசோதனைக்குள்ளாகியிருக்கின்றன. நிறைய கட்டிகள் உடைந்திருக்கின்றன.

Biy Okt 06, 07:08:00 AM GMT-4  
Blogger Muthu said...

//இதில் என்ன தவறு கண்டீர்கள்? இல்லை நீங்கள் அனைவரும் செய்வது/சொல்வது இதிலிருந்து எப்படி மாறுபட்டது? அவரவர் கருத்து அவரவருக்கு உயர்ந்தது.//

krishna,

you have misunderstood. பிறப்பினாலே அதிஷ்டத்தினாலே நல்ல நிலைமைக்கு வந்தவர்கள் அடுத்தவர்களும் நான் பெற்ற முன்னேற்றைத்தை அடைய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் தான் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று இருக்கும் எண்ணத்தைத்தான் நான் கூறினேன்.

Biy Okt 06, 07:23:00 AM GMT-4  
Blogger முத்துகுமரன் said...

//நானும் கல்லூரி காலத்தில் இப்படியான புனிதனாக யோசித்துக்கொண்டிருந்தவன் தான். இன்று திரும்பி பார்க்கையில் எல்லாம் வேடிக்கையாக தோன்றுகிறது. ஆனால் இன்னும் முழுமைபெறவில்லை. கழுவ வேண்டியது இன்னுமிருக்கிறது. //
சோழ நாடான் இந்த முத்துகுமரனும் அப்படித்தான். அழுக்குகளை கழுவத் தொடங்கி இருக்கிறேன்.
இட ஒதுக்கீடு என்பது மக்களுக்கு எதன் பெயரால் கல்வி மறுக்கப்பட்டதோ அதன் பெயரில் தருவதுதான்.

பொருளாதார அடிப்படையில் வேண்டும் என்பவர்கள் மக்கள்தொகை விகிதாச்சார அடிப்படையில் தர ஒப்புக்கொள்வார்களா? அனைவருக்கும் இதன் மூலம் சமத்துவம் கிடைக்குமே.
வலுவுள்ளன் வாழ்வான் என்று சொல்லித் திரிகிறார்களே, இதற்கு ஒப்புக் கொள்ளட்டுமே. வலு உள்ள மக்கள் இனம் வாழ்ந்து கொள்ளும்

எல்லாவகை புனித பிம்பங்களும் இன்று நொறுக்கப்பட்டு வருகின்றன.
அவை தொடர்ந்தும் நடைபெற வேண்டும்.

நட்சத்திர வாழ்த்துகள்

Biy Okt 06, 07:55:00 AM GMT-4  
Blogger Sivabalan said...

சோழநாடன்,

நல்ல பதிவு

Biy Okt 06, 10:00:00 AM GMT-4  
Blogger சீமாச்சு.. said...

//இது வலைப்பூவின் புனித பிம்பங்களின் மனசாட்சிக்கு ஒரு கேள்வி. உங்களுக்கு ஆகாமல் போனதலும் இவனெல்லாம் நமக்கு சரியாக வருகின்றானே என்றும் தானே இடஒதுக்கீடு, திராவிடம் இதையெல்லாம் எதிர்க்கின்றீர்கள்//

இன்னும் இப்படியே தட்டையான எண்ணத்திலேயே இருந்து கொண்டிருப்பது தான் உங்கள் அழுக்குகளுக்குக் காரணம்-னு நெனக்கிறேன்..

எல்லா கோணத்துலயும் சிந்தியுங்கள்.. இந்தியா இப்போ இருக்குற நெலமைக்கு.. உலகளவுல நெலவுற போட்டி மனப்பான்மைக்கு நாம இன்னும் கொஞ்சம் aggressive ஆகத்தான் இருக்க வேண்டும்.. எல்லாரும் தான் முன்னேற வேண்டும்..

Think of it of the analogy with bottom line and topline.. though we definitely need to improve the bottom line we should not leave sight of the topline (achieving among global palyers). Reservation focusses on bottomline.. And aggressive tactics to put too much focus on the reservation will take out our current market share for the global markets..

சும்மா குண்டு சட்டிக்குள்ளாறயே குதிரை ஓட்டிக்கிட்டிருக்காமல்.. கொஞ்சம் வெளியிலயும் கொஞ்சம் பாருங்கண்ணா...

அன்புடன்,
சீமாச்சு..

Biy Okt 06, 10:59:00 AM GMT-4  
Anonymous Hindi-nagpakilala said...

Nice write-up...you got my (+) vote.
You weren't alone, I was same kind of dude in college, now realize the genuniety of this and believe we need to have a reservation more aggressive than one now or the one in proposal.

KVD.

Biy Okt 06, 11:25:00 AM GMT-4  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

I have argued against the current reservation policy for OBCs.I have advocated an affirmative action policy taking into account gender and poverty.Caste should not be the sole criterion.Equality is
very important.Beyond a point reservation results in reverse
discrimination.69% reservation is
a mockery of principle of equality.
There is nothing wrong in evaulating the reservation policy and ensuring that only the needy get the benefits.The current system is skewed in favor of those who are rich and powerful.They do
not want to give up the benefits.
Many academics have argued against
the current reservation system.Try to think beyond stereotypes and
preconceived notions.
இட ஒதுக்கீட்டினை எதிர்ப்பவர்கள் எல்லோரும் பிற்போக்கு கருத்துடையவர்கள்
அல்ல.
very true.

Biy Okt 06, 12:12:00 PM GMT-4  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

மக்கள்தொகை விகிதாச்சார அடிப்படையில் தர ஒப்புக்கொள்வார்களா? அனைவருக்கும் இதன் மூலம் சமத்துவம் கிடைக்குமே.

On what basis.Are you ready for 50% reservation for women or
on the basis of % of population
of each state in central govt.
jobs.Both are examples for proportionate
reservation.Why you want only
on the basis of caste.

Proporionate reservation
violates the principle of equality.
It goes against the fundamental
rights of citizens.

Biy Okt 06, 12:16:00 PM GMT-4  
Anonymous Hindi-nagpakilala said...

along the line of mr.seemachu, i think aggressive people will be aggressive no matter what. if a system closes one path, aggressive person seek out other path to reach their goals - for e.g. one can use money to buy a seat, or study complementing degrees to get into desired jobs. but this reservation is about opening up (at least) one path to those doesn't have zero paths and this will complement the society as a whole.

KVD

Biy Okt 06, 02:06:00 PM GMT-4  
Blogger கால்கரி சிவா said...

//மக்கள்தொகை விகிதாச்சார அடிப்படையில் தர ஒப்புக்கொள்வார்களா? அனைவருக்கும் இதன் மூலம் சமத்துவம் கிடைக்குமே.//

நிச்சயமாக. மக்கள் பிரதிநிதிகளும் மக்கள்தொகை விகிதாசாரத்தில் இருக்கவேண்டும். அப்போதுதான் மைனாரிட்டி ஆப்பீஸ்மெண்ட் ஒழிந்து உண்மையான அரசாங்கம் நடக்கும்

Biy Okt 06, 04:16:00 PM GMT-4  

Mag-post ng isang Komento

<< Home

Miyerkules, Oktubre 04, 2006

18. மரணம் ஒரு முடிவல்ல

சென்ற முறை இந்தியா சென்ற சமயத்தில் தஞ்சையில் உள்ள ஒரு புத்தகக் கடையில் உலாத்திக் கொண்டிருந்த போது அப்துல் ரகுமானின் "மரணம் ஒரு முடிவல்ல" எதேச்சையாக கண்ணில் பட்டது. கட்டுரை புத்தகம் போல தெரிந்ததால் அசுவாரசியமாக புரட்டினேன். ஆனால் கொஞ்சம் படித்த பின்புதான் இதன் தேவை தெரிந்தது.

ஏற்கனவே என் முந்தய பதிவில் அப்துல் ரகுமானின் புத்தகங்களை பற்றி சொல்லும் போது அவரது "பால்வீதி" பற்றியும் சொல்லியிருந்தேன். அப்போது படித்தபோது பால்வீதியின் கவிதைகள் சுத்தமாக புரியவில்லை. ஏதோ பெரிதாக உள்ளே பொதிந்து கிடக்கிறது என்று மட்டும் தெரிந்தது ஆனாலும் வெகு இறுக்கமாக கட்டப்பட்ட கவிதையில், வரிகளுக்கிடையே மட்டுமல்ல வார்த்தைகளுக்கிடையே படித்தாலும் அவ்வளவாக புரியவில்லை. இதை ரகுமானே ஒப்புக்கொண்டதோடு கவிதையின் பொருள் விளங்கிக்கொள்ள மூடியுள்ள திரையின் கயிறுகளை நம் கையில் தருகிறார். "மரணம் ஒரு முடிவல்ல" புத்தகம் பால்வீதியின் மர்ம முடிச்சுகளை அவிழ்த்து போடுகிறது. முழுக்க சார்லியஸத்தின் அல்லது இருண்மையில் கட்டப்பட்ட பால்வீதியை கொஞ்சமேனும் வெளிச்சத்தில் படிக்க இது பெரிதும் தேவைப்படுகிறது. கிட்டதட்ட Spoon Feeding போலத்தான் என்றாலும் என்னைப் போல உள்ளவர்களுக்கு இது மிகவும் தேவை என்று நினைக்கிறேன்.

இதிலிருந்து ஒருதுளிமட்டும் இங்கே

என்னிலிருந்து கிழிக்கப்பட்ட
ஒரு தேதித்தாள்
இங்கே... சுவரில்...
சிலுவை அறையப்பட்டிருக்கிறது.

கிரண நூலிழை பின்னிய
இந்தக் கைக்குட்டை
விடைபெற்ற ஒரு நேரத்தின்
ஞாபகச் சின்னம்.


இது முன்னரே கொஞ்சம் புரிந்தாலும் கீழுள்ள விளக்கம் பார்த்தபின் படிக்கையில் முழுபரிணாமம் தெரிகிறது.

சுவரில் என் புகைப்படம் தொங்குகிறது. இது நானா. இல்லை இது வேறு நான். பழைய நான். இறந்த காலத்தின் ஏதொ ஓரு கணத்து நான். ஆம் இறந்து விட்ட நான். கணத்திற்கு கணம் நான் மாறிக்கொண்டிருக்கிறேன். புதிதாகிக் கொண்டிருக்கிறேன். உடலால், உள்ளத்தால். தினந்தோறும்
நான் கிழிக்கப்படுகிறேன். ஒவ்வொரு தேதித்தாளாக. இதோ! இது என்றோ என்னிலிருந்து கிழிக்கப்பட்ட ஒரு தேதித் தாள். இங்கே சுவரில் சிலுவை அறையப்பட்டிருக்கிறது.

அந்த புகைப்பட நேரம் நினைவு வருகிறது. அந்த நேரத்திற்குத்தான் என்மீது எவ்வளவு காதல், என்னிடமிருந்து விடைபெற்று செல்லும்போது அதை நான் மறந்து விடாமலிருக்க ஞாபகசின்னமாய், இந்த அழகிய கைக்குட்டையைத் தந்துவிட்டு சென்றிருக்கிறது. கிரணங்களால் என்னையே எம்ப்ராய்டரி செய்த கைக்குட்டை.


அப்துல் ரகுமானின் எண்ணவோட்டஙகள் எப்போதுமே என்னை பிரமிக்க வைக்கும். இந்தபுத்தகமும் அதை பிசிறில்லாமல் செய்திருக்கிறது. தனிமனிதராக அவர்பற்றிய பிம்பம் எதுமில்லை. எனவே தேவைக்கு அதிகமாக அவர் கலைஞரை புகழ்வது பிடிக்காதாயினும் இன்னும் என்னுளிருக்கும் பலூன் உடையவில்லை.

14 Comments:

Blogger ENNAR said...

நன்றாக எழுதியுள்ளீர்கள்

Miy Okt 04, 10:15:00 PM GMT-4  
Blogger Muthu said...

வாங்க என்னார் ஐயா,
ஆகா ரெண்டு நாள் நட்சத்திர பதிவு போடலைன்னதும் எல்லாரும் மறந்துட்டாங்களோன்னு நினைத்தேன். :-)
வருகைக்கு நன்றி.

Miy Okt 04, 10:50:00 PM GMT-4  
Blogger Sivabalan said...

நல்ல பதிவு.

நன்றி

Miy Okt 04, 11:00:00 PM GMT-4  
Blogger Muthu said...

சிவபாலன்,
வருகைக்கு நன்றி.

Miy Okt 04, 11:37:00 PM GMT-4  
Blogger மலைநாடான் said...

சோழநாடன்!

அழகான, அருமையான, பதிவு. நன்றி

Huw Okt 05, 12:12:00 AM GMT-4  
Blogger வெற்றி said...

சோழநாடான்,
நீங்கள் பதிவிலிட்ட அப்துல்ரகுமானின் கவிதை துப்பரவாகப் புரியவில்லை. நல்லவேளை, கீழே விளக்கத்தைக் கொடுத்துள்ளதால் புரிந்து கொண்டேன்.
நல்ல பதிவு.

Huw Okt 05, 01:11:00 AM GMT-4  
Blogger Chandravathanaa said...

இரத்தினச்சுருக்கம் போல சொற்பமாக எழுதியிருந்தாலும் அந்தப் புத்தகத்தின் மீது ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளீர்கள். கிடைத்தால் கண்டிப்பாகப் படித்துப் பார்க்க வேண்டும்.

Huw Okt 05, 05:53:00 AM GMT-4  
Blogger Muthu said...

மலைநாடான்,
வருகைக்கு நன்றி.

வெற்றி,
பால்வீதி கவிதைகள் எல்லாமெ இப்படித்தான். அப்துல் ரகுமானே இந்த நூலில் சொல்லியிருக்கிறார், பெரும்பாலானவை பரிசோதனை கவிதைகள் அதனால் மிகை இருண்மை இருக்கும் என்று.

சந்திரவதனா,
கிடைத்தால் கண்டிப்பாக படியுங்கள். இது ஜூ.வி யில் தொடராக கூட வந்தது என்று நினைக்கிறேன். முடிந்தால் பின்பு சுட்டி தருகிறேன்.

வைசா,
நல்ல புத்தகம்தான். படிக்கும் போது பால்வீதியையுன் இதனையும் சேர்த்து படியுங்கள்.

Huw Okt 05, 01:48:00 PM GMT-4  
Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சோழநாடான்!
இந்த ஞானசூனியத்தை மன்னிக்க வேண்டும். கம்பனைக்கூட கஸ்டப்பட்டால் புரிந்து விடுவேன் போல் இருக்கு!!!
என்ன??,இவங்க கங்கணங்கட்டி.; எங்களுக்குப் புரியக் கூடாதெனதான் எழுதுகிறாங்களா?,,,
ஏதோ நீங்க விளக்கிவிட்டீங்க?,,,அதுகூட சிக்கலாகத் தான் இருக்கு!எனக்கு!!
என்ன?,,நான் தேறாத கேஸ் போல இருக்கா?,,விட்டுத் தள்ளுங்க!!!
நான் பாரதியுடனும்;கண்ணதாசனுடனும் என் சொச்சக் காலத்தை ஓட்டுகிறேன்.
யோகன் பாரிஸ்

Huw Okt 05, 03:02:00 PM GMT-4  
Blogger senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

நல்லா எழுதி இருக்கீங்க கவிதை அதன் பொருள் எல்லாம் பிரமிக்க வைத்தது.

Biy Okt 06, 02:51:00 AM GMT-4  
Blogger Muthu said...

யோகன்,
உண்மையிலேயெ இவர் கவிதையெல்லாம் மிக நன்றாயிருக்கும்ங்க.இவரோட "பித்தன்", "ஆலாபனை" யெல்லாம் தெளிவாய் இருக்கும். அவை கிடைத்தால் படித்துபாருங்கள்.

Biy Okt 06, 04:48:00 AM GMT-4  
Blogger Muthu said...

குமரன் எண்ணம்,

வருகைக்கும், வாழ்த்துகளுக்கு நன்றி.

Biy Okt 06, 04:51:00 AM GMT-4  
Blogger Muthu said...

சோழா,

விளக்கத்திற்கு பிறகுதான் புரிகிறது.அருமையாக கவிஞர்.

கவியரங்கத்தில் கலைஞரை பாராட்டுபவர் என்று மட்டுமே நினைத்திருந்த என்னை இவரை பற்றி மீள் வாசிப்பு செய்யவேண்டும் என்று தூண்டிவிட்டீர்கள்.நன்றி.

Biy Okt 06, 05:06:00 AM GMT-4  
Blogger Muthu said...

முத்து,
இவர் கவிதைகளுக்கும் அவரது நிலைபாடுகளுக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. இன்னும் சொல்லபோனால் இது தனி வழியில் செல்லும். கண்டிப்பாக வாசித்து பாருங்கள்.

Biy Okt 06, 05:12:00 AM GMT-4  

Mag-post ng isang Komento

<< Home

Lunes, Oktubre 02, 2006

17. நட்சத்திர வணக்கம்

திடீரென தூக்கத்திலிருந்து எழுபவன் போல சட்டென தோன்றும் சில கணங்களில் மட்டுமே எழுதி பழக்கப்பட்ட என்னை இந்த வாரம் முழுவதும் எழுத சொல்லியிருக்கிறார்கள். முன்பே எழுதி தயாராய் வைத்துக் கொண்டு போடலாமென்றாலும் இன்னும் பழைய பழக்கம் மாத்திரம் முன்னால் வந்து உட்கார்ந்து கொண்டு அடம் பிடிக்கிறது. எனவே இந்த வாரம் எந்த வித முன் தயாரிப்பும் இன்றி, நதியில் மிதந்து செல்லும் ஓர் கட்டையைப் போல தோன்றியதை அதன் போக்கிலேயே எழுதிக்கொண்டு போவதாய் உத்தேசம்.

நான் பெரும்பாலும் பலரைப் போலவே இப்படித்தான் வாழ்விலும் அது போகும் போக்கிலேயே மிதந்தபடி சென்று கொண்டிருக்கிறேன் அதன் சுழல்களையும் மோதும் அலைகளையும் ரசித்தபடி. இதற்கு "பாதுகாப்பான" இடத்தில் பிறந்ததும் வளந்ததும் கூட காரணமாயிருக்கலாம். என்னதான் நதியின் போக்கிலேயே போனாலும் சில சமயங்களில் நான் நினைத்த வழி மட்டுமே அந்த நதி செல்லவேண்டும் அதற்காக முழுவதுமாக களமிறங்கவும் தயங்குவதில்லை. ஒவ்வொரு முறையும் மோதி வெற்றிபெறும் போது கொஞ்சமேனும் தலையில் ஏறிவிடும் பாரத்தை குறைக்க பலர் துணைதருவதுண்டு, அதில் மிக முக்கியமானவர் காந்தி. தன் வாழ்க்கையின் திசைகளை முழுதுமாக தானே தீர்மானித்து அதிலேயே பயணம் செய்தவர்.

இவரைப் பற்றி ஆரம்பத்தில் பாடபுத்தகங்கள் கட்டமைத்த புனிதபிம்பமே இருந்தாலும் இப்போது முற்றிலும் மாறிவிட்டது. பாடபுத்தகங்கள் கட்டமைக்கும் இந்த புனித பிம்பங்கள் பற்றி எனக்கு நிறைய விமர்சனம் உள்ளது. இவை பெரும்பாலும் இலேசான காற்றில் உடைந்து விழும் மணல் சிற்பம் போல சிறு விமர்சனத்தில் நொறுங்கிப்போகின்றன. அதிலும் உடைந்து விழுபவை யோசிக்க வெளியை அளிக்காமல் முற்றிலுமாய் எதிற்புறத்தில் நிறுத்துகின்றன. இதைப்பற்றி இன்னொருநாள் சவகாசமாய் உட்கார்ந்து பார்க்கவேண்டும். காந்தி பிம்பமாயிருந்து, உடைந்து எதிர்ப்பக்கம் போய் மீண்டும் என்பக்கம் வந்து விட்டார். இப்போதெல்லாம் எனக்கு அவர் கடவுள் உருவில் காட்சி தருவதில்லை. ஆனாலும் சக மனிதராக மிக அதிகமாய் வசீகரிக்கிறார். தனிமனிதனாக நின்று மொத்ததையும் மாற்றி போட்டார்.

பாட நூல்களில் சொல்வதுபோல அவர்தான்(அல்லது அவர் மட்டும்) சுதந்திரம் வாங்கித்தந்தார் என்று சொல்ல மாட்டேன். ஆனாலும் அவர் பங்கு மற்ற அனைவரையும் விட மிகப்பெரியது. நம்முடைய வாழ்க்கையின் ஓட்டத்தை நம் விருப்பப் படியே நடத்த கூட பெரும்பாடயுள்ள நேரத்தில் தனது வாழ்க்கை ஓட்டத்தை மட்டுமல்லாமல் அவர் சார்ந்த சமூகத்தினதின் ஓட்டத்தையும் மாற்றி அமைத்தவர். மற்றவற்றை விட இது எனக்கு அவரின் மற்ற சாதனைகளை விட பெரும் செயலாக தோன்றுகிறது. இன்று காந்தி ஜெயந்தி. இது வெறும் நினைவூட்டலாக மட்டும் இல்லாது அவரை மீள்வாசிக்கும் நிகழ்வாக அமைந்தால் நல்லது. ஆனாலும் சில புனிதபிம்பங்கள் உருவாக்கிய "காந்தி மஹான்" எனும் சொல் இதையெல்லாம் அனுமதிக்குமாவென்றும் தெரியவில்லை.

[நண்பர்களுக்கு, சட்டென முடிவான ஒரு பயணத்தின் படி இப்போது washington லிருந்து wiscosin சென்றுகொண்டிருக்கிறேன். எனவே நாளை வரை மட்டுறுத்தல் தாமதமாகலாம். மன்னிக்கவும்]

29 Comments:

Blogger வெற்றி said...

சோழநாடான்,
நட்சத்திர வார வாழ்த்துக்கள்.

Lun Okt 02, 01:30:00 AM GMT-4  
Blogger சின்னக்குட்டி said...

நட்சத்திர வாழ்த்துக்கள்

Lun Okt 02, 03:16:00 AM GMT-4  
Blogger Chandravathanaa said...

வாழ்த்துக்கள்

Lun Okt 02, 05:36:00 AM GMT-4  
Blogger ENNAR said...

கால வெள்ளத்தின் போக்கில் தான் நாம் போக வேண்டும் வாழ்வில் எதர் நீச்சல் போட பழகிக் கொள்ள வேண்டும்

Lun Okt 02, 06:09:00 AM GMT-4  
Blogger G.Ragavan said...

வாருங்கள் சோழநாடன். இந்த வாரம் இனிய வாரமாக அமைய எனது வாழ்த்துகள். நட்சத்திர வாரத்திற்கு எனது வாழ்த்துகள்.

Lun Okt 02, 08:25:00 AM GMT-4  
Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

"இப்போதெல்லாம் எனக்கு அவர் கடவுள் உருவில் காட்சி தருவதில்லை. ஆனாலும் சக மனிதராக மிக அதிகமாய் வசீகரிக்கிறார். தனிமனிதனாக நின்று மொத்ததையும் மாற்றி போட்டார். "

சோழநாட்டாரே!
வருக ,நட்சத்திரமாக ஒளிதருக!
தங்கள் காந்தியார் பற்றிய மேற்படிக் கூற்றிடன் ;நான் ஒத்துப் போகிறேன். ஆனால் காந்தி மாத்திரமல்ல இந்த "ஒளிவட்டத்துள்" உள்ளவர்கள். எல்லோரும் நம்போல் தான் ;என என் எண்ணத்தில் வந்து போகும்.
ஈழத்தவரெனினும்; காந்தியை எங்களுக்கும் தாத்தா எனத் தான் சொல்லித் தந்தார்கள். அன்றைய வீடுகளில்,காந்தியாரின் பொக்கைவாய் சிரிப்புடன் ஓர் படம்;விறாந்தைகளில் தொங்கும். அதனால் அவர் இன்றும் எம்மனத்தில் தொங்குகிறார்.
யோகன் பாரிஸ்

Lun Okt 02, 08:37:00 AM GMT-4  
Blogger Sivabalan said...

நட்சத்திர பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.

Lun Okt 02, 09:37:00 AM GMT-4  
Blogger Sri Rangan said...

வணக்கம் சோழநாடான்!

வாழ்த்துகிறேன்,
தொடர்ந்து எழுதுங்கள்.

Lun Okt 02, 11:21:00 AM GMT-4  
Blogger SnackDragon said...

சோழநாடன்,

நட்சத்திர வார வாழ்த்துக்கள்.

Lun Okt 02, 12:44:00 PM GMT-4  
Blogger gulf-tamilan said...

நட்சத்திர வார வாழ்த்துக்கள்!!

Lun Okt 02, 06:45:00 PM GMT-4  
Blogger ஆவி அம்மணி said...

வாழ்த்துக்கள் நண்பரே!

இனிய நண்பரொருவர் நட்சத்திரமாகியிருப்பது குறித்து மகிழ்ச்சி!

Mar Okt 03, 01:18:00 AM GMT-4  
Blogger பொன்ஸ்~~Poorna said...

வாழ்த்துக்கள் சோழநாடன், நட்சத்திர வாரத்துக்கு..

உங்கள் அறிமுகம் படித்தேன்.. சொல் ஒரு சொல்லில் "உங்கள் பெயரை" அலசி ஆராய்ந்தது நினைவுக்கு வருது(அப்போவே நினைத்தேன்), மூன்று பேரில் க் சேர்த்தவர் நீங்கள் தானா? :)

Mar Okt 03, 02:10:00 AM GMT-4  
Blogger மலைநாடான் said...

நசாழநாடன்!

இனிமையான நட்சத்திரவாரமாக அமைய நல்வாழ்த்துக்கள்.

Mar Okt 03, 10:16:00 AM GMT-4  
Blogger நற்கீரன் said...

காந்தி உலக்கு மாற்று வழிகளை உணரவைத்தார். 1 மில்லியன் மக்கள் சுயமரியாதையுடன் வாழ வழிசெய்ய உதவினார். இன்று இந்தியா கொஞ்சமாவது சுயமாக சிந்திக்கின்றதென்றால் அதன் ஒரு ஊற்று காந்தி.

உங்கள் நட்சத்திர வாரம் நன்றே அமைய வாழத்துக்கள்.

Mar Okt 03, 09:48:00 PM GMT-4  
Blogger நற்கீரன் said...

காந்தி உலக்கு மாற்று வழிகளை உணரவைத்தார். 1 மில்லியன் மக்கள் சுயமரியாதையுடன் வாழ வழிசெய்ய உதவினார். இன்று இந்தியா கொஞ்சமாவது சுயமாக சிந்திக்கின்றதென்றால் அதன் ஒரு ஊற்று காந்தி.

உங்கள் நட்சத்திர வாரம் நன்றே அமைய வாழத்துக்கள்.

Mar Okt 03, 09:48:00 PM GMT-4  
Blogger Ravichandran Somu said...

இந்த வார நட்சத்திரம் தம்பி சோழநாடானுக்கு வாழ்த்துக்கள்.

-ரவிச்சந்திரன்

Mar Okt 03, 10:18:00 PM GMT-4  
Blogger Muthu said...

நண்பர்களே எதிர்பாரா மற்றும் தவிர்க்கவியலா ஒரு பயணத்தினால் இருநாட்கள் ஏதும் எழுத இயலாமல் போய்விட்டது. பின்னூட்டமிட்டவர்களுக்கு மறுமொழிகூறவும் முடியவில்லை. தாமதத்திற்கு மன்னிக்கவும்

Miy Okt 04, 08:37:00 PM GMT-4  
Blogger Muthu said...

வெற்றி, சின்னக்குட்டி, சந்திரவதனா, வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

Miy Okt 04, 08:37:00 PM GMT-4  
Blogger Muthu said...

என்னார் ஐயா எதிர்நீச்சலும் உண்டு. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

Miy Okt 04, 08:37:00 PM GMT-4  
Blogger Muthu said...

ராகவன் வாழ்த்துகளுக்கு நன்றி

Miy Okt 04, 08:37:00 PM GMT-4  
Blogger Muthu said...

யோகன் உண்மைதான். அதீத புகழப்போய் அது இவ்விதமான வட்டங்களை உண்டாக்கி விடுகிறது. வாழ்த்துகளுக்கும் நன்றி.

Miy Okt 04, 08:38:00 PM GMT-4  
Blogger Muthu said...

சிவபாலன், சிறீரங்கன், கார்த்திக், gulf-tamilan வாழ்த்துகளுக்கு நன்றி

Miy Okt 04, 08:47:00 PM GMT-4  
Blogger Muthu said...

ஆவி அம்மணி, வாங்க, வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி

Miy Okt 04, 08:49:00 PM GMT-4  
Blogger Muthu said...

பொன்ஸ்,
ஆமாம் நம்ம பேராச்சே அதுதான் நானும் உள்ளே குதிச்சுட்டேன்.
அது நண்பன் தான். நானும் ஆங்கிலத்தால் "க்"கை தொலைத்தவன். [மற்றவர்களுக்காக: இதன் பின்புலம் இங்கே இருக்கு]

Miy Okt 04, 08:49:00 PM GMT-4  
Blogger Muthu said...

மலைநாடான் வாழ்த்துகளுக்கு நன்றி.

Miy Okt 04, 08:55:00 PM GMT-4  
Blogger Muthu said...

நற்கீரன் அவரது சேவை பெரிது. இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் கடவுளாக்குவதோடு நான் ஒப்பவில்லை. வாழ்த்துகளுக்கு நன்றி.

Miy Okt 04, 08:55:00 PM GMT-4  
Blogger Muthu said...

ரவியண்ணா, வாழ்த்துகளுக்கு நன்றி.

Miy Okt 04, 08:55:00 PM GMT-4  
Blogger வடுவூர் குமார் said...

சோழநாடான்,
நட்சத்திர வார வாழ்த்துக்கள்.

Huw Okt 05, 04:09:00 AM GMT-4  
Blogger senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

நட்சத்திர வாழ்த்துக்கள்

Biy Okt 06, 02:50:00 AM GMT-4  

Mag-post ng isang Komento

<< Home

Linggo, Setyembre 10, 2006

16. உதிரப்போகும் ரோமம்- வைக்கோ

சில காலமாய் வைகோவின் செவ்விகளை வருத்தத்தோடு மௌனமாக படித்து வருகிறேன். தூளாய்ப்போன நம்பிக்கையினால் இப்போது இவரைப் பார்க்கும் போதெல்லாம் சிதிலமடைந்து கிடக்கும் பழைய கோட்டையை காண்கையில் தோன்றும் சொல்லவியலா அயர்ச்சிதான் வருகிறது.

சில காலம் முன்பு வரை தேய்ந்துவிட்ட திராவிட கொள்கைகள் இவரால் துளிர்க்குமென்ற நம்பிக்கை எனக்கு இருந்ததென்னவோ உண்மைதான். அது இந்த தேர்தலுக்கு பிறகு முற்றிலும் நிராசையாகிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் வைக்கோ கூட்டணியிலிருந்து வெளியேறியது மு.க வின் சதியாயிருக்கலாமென்றும், அல்லது கட்சியிலுள்ள இரண்டாம் கட்ட தலைவர்களால் உந்தப்பட்டு இந்த முடிவை இவரது விருப்பமின்றி எடுத்திருக்கலாமென்றும் அதனால் இவரை கட்சியின் தோழர்களுக்காக கொள்கைகளை சமரசம் செய்து கொண்டவர் என்று பலரைப்போல் நானும் நம்பியிருந்தேன். பெரும்பாலும் எனக்கு வைகோ மற்றும் அவரது தொண்டர்கள் மீதிருந்த நம்பிக்கையில் துளியளவு கூட அவரது இயக்கத்தின் இரண்டாம் மட்ட தலைவர்களிடம் இல்லை. பெரும்பாலானவர்கள் பதவி வெறிபிடித்த ஓட்டுண்ணி அரசியல் வியாதிகளாகவே தெரிந்தனர். அதுகூட இவ்விதமான எண்ணம் கொள்ள காரணமாயிற்று. அதையெல்லாம் சமாளித்து வெற்றிகரமான மாற்று சக்தியாக அல்லது குறைந்தது ஒரு முக்கிய தீர்மாணிக்கும் நிலைக்கு வருவாரென்று இருந்தேன். ஆனால் அம்மையாருடன் கூட்டணிகொண்ட பின்பு இவரது செவ்விகளும், பேச்சுகளும் சாயத்தை மொத்தமாக வெளுத்து விட்டன. இப்போது அவ்விதம் வந்து விடுவாரோ என்று கவலைப்பட வைத்து விட்டார். நாய் முகமூடி மாட்டினால் குரைத்துத்தான் ஆகவேண்டும். அதைக்கூட ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளலாம். ஆனாலும் அளவுக்கு மீறி வாலைக்குழைத்துக்கொண்டபடி எசமானிக்காக துதிபாடுவது அவரது மதிப்பை வெகுவாக குறைத்து விட்டது. இதில் திருமா எவ்வளவோ தேவலாம்(இதுவரை). திருமா இதில் மிகவும் சமன் செய்து நடப்பதாக தோன்றுகிறது. பொதுவாக கூட்டணி தலைவியை ஆதரித்தாலும் தேவையான சமயங்களில் மட்டும் எதிர்கருத்தை தயக்கமின்றி சொல்லியும் சரியான கோட்டில் செல்வதாக தோன்றுகிறது.

பெரும்பாலும் எனக்கு திராவிட தலைவர்களின் பால் ஈர்ப்புகொள்ள வைத்ததில் திரவிட சமூக நீதிகொள்கைகளும், அவர்களின் தமிழ் மேடைப்பேச்சுக்களும் தான். பெரும்பாலும் கலைஞரின் அறிக்கைகளை பெரும்பாலும் அதன் உள்ளடக்க கருத்து எனக்கு ஒப்பவில்லையென்றாலும் அதில் உள்ள தமிழ் ஆளுமைக்கும், தொனிக்கும் எள்ளலுக்காகவும் படிப்பேன். அதேபோல் தான் வைகோவின் மேடைப்பேச்சும். இதுவரை அவரது பொதுக்கூட்டங்களுக்கு நேரில் சென்றதில்லையாயினும் ஒலிப்பேழைகளின் வழி நிறைய கேட்டிருக்கிறேன். உணர்வுக்கு தேவையான ஏற்ற இறக்கங்களுடன் நல்லமொழிநடையோடு, ஏராளமான புதிய மேற்கோள்களோடு கேட்கும்போது நம்மையும் அந்த சுழலில் அதன் வேகத்தோடு இழுத்துச் செல்லும். அவரது மேற்கோள்கள் பலசமயம் மூலத்தை தேடி ஓடவைக்கும். ஆனால் இன்று அதே மேற்கோள்கள் நகைப்பின் மையப்புள்ளிகளாகி விட்டன. அதேபோல் அதேபோல அவரது துணிவான ஈழநிலைப்பாடும் அவரை திரும்பி பார்க்க வைத்தன. என் பதின்ம வயதுவரை எங்கள் பகுதிகளில் விடுதலைப்புலிகள்தான் பெரும்பாலானோரின் ஆர்தசன நாயகர்கள். அதுதான் முதலில் என்னை இவர் பேச்சுகளின் பால் கவனம் கொள்ள வைத்தது. குறைந்தபட்சம் இதில் இன்னும் சகோதரிக்காக சமரசம் செய்து கொள்ளாதது ஆறுதல் அளிக்கிறது.

என் தந்தையின் கல்லூரிப்பருவத்தில் அவரும் அவர் நண்பர்களும் நாவலரின் பேச்சைக் கேட்ட 10 கல் பயணம் செய்து கேட்டுவருவார்களாம். அதுவும் இறுதியாக "எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழே என்று சங்கே முழங்கு" என்று முடிக்கும் வரை கேட்ப்பார்களாம். அதே நாவலர் உதிர்ந்த ரோமமான போது எப்படியிருந்தவர் இந்த பதவியாசையினால் இப்படியாகிவிட்டாரென்று மிக வருத்தப்பட்டார். அது அவர் தலைமுறை. அடுத்த தலைமுறைக்கு வைக்கோவும் வந்து விட்டார். எப்படியும் சகோதரியை விட்டு விலகும் போது மீண்டும் அதே வாசகம் அல்லது அதேபோன்ற வாசகம் புரட்சிதலைவியிடமிருந்து வருமென்று எதிர்பார்க்கலாம். அப்போது ஒரு கீழான அரசியல்வியாதியாகத்தான் தோண்றப் போகிறார். காரணம் வைக்கோ தன் மீதான நம்பகத்தன்மையை இழந்துவிட்டார். இனி அதை திரும்ப கொண்டுவாரென்ற நம்பிக்கையுமில்லை.

எனவே உதிரப்போகும் ரோமத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைச் இப்போதே சொல்வதைத்தவிர வேறு ஒன்றுமில்லை.

10 Comments:

Blogger அருண்மொழிவர்மன் said...

அண்மைக் காலத்தில் வைகோவின் நடவடிக்கைகளை பார்க்கின்றபோது ஜெயலலிதா அத்வானியை செலக்டிவ் அம்னீஷியா என்றது தான் ஞாபகம் வருகிறது. அவர் செய்த மிகப் பெரிய காமெடி தன்னையும் ஜெயையும் ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள் என்றது.

Lun Set 11, 04:48:00 AM GMT-4  
Blogger senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

எதையுமே எதிர்பார்க்கக் கூடாது என்பதுதான் எனக்குத் தெரிந்த அரசியல் பாடம். இந்திரா காந்தியுடன் கலைஞர் கூட்டு வைக்கவில்லையா? சந்தர்ப்பவாதம் என்பது அரசியலில் அங்கமாகி விட்டதால் வைகோவின் போக்கு எனக்கு ஒன்றும் மிகப் பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தவில்லை.

அரசியலில் மட்டும் எதையும் யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள் ஏமாந்து போவீர்கள்.

Lun Set 11, 09:29:00 AM GMT-4  
Blogger nayanan said...

வைகோ அணி மாறியதால் அவர் ஒரு துரோகி
என்றூ சொல்லப்படவில்லை எனினும்,
தமிழ்நாட்டு மக்களுக்குப் பெரிய துரோகத்தை செய்திருக்கிறார் என்று ஒத்துக் கொள்கிறார்கள்
மக்கள்.

தமிழீழத்திலே, கருணா என்ற ஒருவர்
சிங்களத்துடன் போரிட்டார்். பின்னர் தமிழ் உணர்வை மறந்து தமிழர்களின் உணர்வுகளுக்குத் துரோகம் செய்யும் வகையில் யார் தமிழர்களின் உணர்வுகளை
கசக்கிக் காயப்போடுகிறார்களோ அவர்களுடனே,அந்த சிங்களவர்களோடெயே போய் ஒட்டிக் கொண்டார் கருணா.சிங்களமும் அவரைத் தற்போதைக்கு அரவணைக்கிறது.

அதேபோல,தமிழ்நாட்டிலே,
செயலலிதாவுடனும் அ.தி.மு.கவுடனும்
போரிட்டார் வைகோ. பின்னர் தமிழ் உணர்வை மறந்து, தமிழர்களின் உணர்வுகளுக்குத் துரோகம் செய்யும் வகையில் யார் தமிழர்களின் உணர்வுகளை
கசக்கிக் காயப்போடுகிறார்களோ அவர்களுடனே, அந்த செயலலிதா அம்மையாருடனேயே போய் ஒட்டிக் கொண்டார். அம்மையாரும் தற்போது அவரை அரவனணக்கிறார்.

தமிழ் தமிழர் உணர்வு என்று சொல்லப்படும்போது, தமிழ் மக்களுக்கு தமிழகத்தில், யாரின் மேலும் நம்பிக்கை இல்லாமற் போனதற்கு வைகோ பெரும்பங்காற்றியிருக்கிறார்.

எனினும் நீங்கள் சொல்லியிருப்பது போல,
ஒட்டிக் கொண்டதெல்லாம் ஒரு நாள் உதிரத்தான் போகிறது.

நல்ல பதிவு. பாராட்டுக்கள்.
அன்புடன்
நாக.இளங்கோவன்

Lun Set 11, 10:07:00 AM GMT-4  
Blogger Muthu said...

நண்பர்களே, வருகைக்கும் மறுமொழிகளுக்கும் நன்றி.

நாடோடி,
ஆம். அவர் கூட்டணி வைத்தது கூட பெரியதாக தெரியவில்லை. ஆனால் அவரது தற்போதைய செவ்விகள் தான் அவரை மிகவும் கீழிறக்குகின்றன.

அருண்மொழி,
///
தன்னையும் ஜெயையும் ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள் என்றது.
///
அதனால்தான்
"ஆனால் இன்று அதே மேற்கோள்கள் நகைப்பின் மையப்புள்ளிகளாகி விட்டன. " என்றேன்.

குமரன்(எண்ணம்),
அவரது கூட்டணி ஒப்புக்கொள்ள முடியாத ஒன்று என்றாலும், அது ஏமாற்றத்தை தரவில்லை. ஆனால் இந்த அளவிற்கு அம்மையாரின் அடிவருடியாக மாறியதுதான் ஏமாற்றமாக உள்ளது. அதனால்தான் இந்த விஷயத்தில் திருமாவுடன் ஒப்பிட்டு சொல்லியிருக்கிறேன்.

நாக.இளங்கோவன்,
சரியாக சொல்லியிருக்கின்றீர்கள். வைக்கோ தம் மீதான நம்பிக்கையை பெருமளவு உடைத்து விட்டார்.

Lun Set 11, 08:24:00 PM GMT-4  
Blogger Chandravathanaa said...

சோழநாடான்
நட்சத்திர வருகைக்கு வாழ்த்துக்கள்.

Lun Okt 02, 01:04:00 AM GMT-4  
Blogger SP.VR. SUBBIAH said...

கழுத்தில் மாலைகளோடு
கையில் வாழ்த்துக்களோடு

வாருங்கள் நட்சத்திரப்பதிவாளர் வடுவூராரே!
உங்களின் இவ்வாரப் பணி சிறக்க வாழ்த்துக்கள்

வைக்கோவைப் பற்றி:
மனித வாழ்க்கையே ஒருநாள் உதிரப்போவதுதான்
ஆனால் பணத்திற்க்காகவும் பதவிக்காகவும் இடையில் தன் நிலையிலிருந்து உதிராமல் இருக்கவேண்டும்

அரசியலில் இது சாத்தியமில்லை - உடன் இருக்கும் கட்சியின் அமைப்பாளர்களூம், தொண்டர்களில் சிலரும் காட்டும் ஆட்டங்களில் உதிரும்படியாகிவிடும்!

Lun Okt 02, 01:26:00 AM GMT-4  
Blogger ஜோ/Joe said...

வைகோ-வின் மீது பெரிய எதிர்பார்ப்பு வைத்து ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்

Lun Okt 02, 01:57:00 AM GMT-4  
Blogger Muthu said...

சந்திரவதனா,
வாழ்த்துகளுக்கு நன்றி.

Miy Okt 04, 09:03:00 PM GMT-4  
Blogger Muthu said...

வாத்தியாரையா,
வாழ்த்தை கவிதையாவே படிச்சுட்டீங்களா. வாழ்த்துகளுக்கு நன்றி.

Miy Okt 04, 09:03:00 PM GMT-4  
Blogger Muthu said...

ஜோ,
உங்கள் பதிவுகளை படித்திருக்கிறேன். நம் எண்ணங்கள் இணையும் பல புள்ளிகளில் இதுவும் ஒன்று.

Miy Okt 04, 09:05:00 PM GMT-4  

Mag-post ng isang Komento

<< Home

Huwebes, Hulyo 06, 2006

15. அப்பாடி நானும் ஆறு போட்டாச்சு

பிடித்த புத்தகங்கள்.
1. சயாம் மரண ரயில் - சண்முகம். இரண்டாம் உலக யுத்தத்தின் போது மலேய தமிழ்மக்களை ஜப்பானியர் கொடுமைப்படுத்தியதை விவரிக்கும் நாவல். அப்பெரும் சோகங்களுக்கு மத்தியில் ஒர் தமிழ் இளைஞனுக்கும், தாய்லாந்து யுவதிக்குமான காதலைச் சொல்லும் நாவல். கொஞ்சம் சினிமா போலிருந்தாலும் அந்த காதல் கதை எங்கள் வீட்டிலிருக்கும் அனைவரது மனதையும் வெகுவாக கவர்ந்தது. கிட்டதட்ட வீட்டில் அனைவரும் வரிகளை மனப்பாடமே செய்து விட்டோம். அதனால்தான் எனக்கு பெண் பார்த்து விட்டு வந்து அம்மாவும், தங்கையும் "பெண் அங்சாலா(நாவலின் நாயகி) போல் இருப்பாள்" என்று சொன்ன ஒரே வரியில் தலையாட்டிவிட்டேன் :-))) . இது மலேயாவிலிருந்து எங்களுக்கு வந்த நாவல். மலேயாவிலிருக்கும் சண்முகம் என்பவர் எழுதியது. எனவே மலேசியா, சிங்கப்பூரிலிருக்கும் நண்பர்கள் அங்கே தேடிப்பார்க்கலாம். இதே சம்பவத்தை வைத்துத்தான் "End of All Wars" என்ற ஆங்கில படமும் வந்தது. ஆனால் இந்த புத்தகம் அனைத்து தரப்பாரையும் காட்டுவது போலில்லாமல் வெறும் ஆங்கிலேயரை மட்டும் முன்னிறுத்தியும் மற்றவர்களின் பங்களிப்பையோ, சோகத்தையோ சுத்தமாக காட்டாமல் எடுக்கப்பட்ட படம்.

2. பித்தன் - அப்துல் ரஹ்மான் முதலில் படித்தது அப்துல் ரஹ்மானின் பால்வீதியென்றாலும் மிக மிக பிடித்த கவிதை தொகுப்பு "பித்தன்" தான். ஏற்கனவே இதைப்பற்றி சொல்லியிருக்கிறேன். என்னைப் பொருத்தவரை இதுதான் அவரது masterpiece. அது ஏனோ விருது வாங்கிய ஆலாபனையை விட இதுதான் எனக்கு மிகவும் பிடித்தது.

3. பொன்னியின் செல்வன் - கல்கி. இதைப்பற்றி சொல்லவேண்டுமா என்ன? :-)

4. வெள்ளரி நிலத்தில் பிள்ளைப்பேறு - ருஷ்ய குறுநாவல்களின் மொழிபெயர்பு.இது சிறந்த ருஷ்ய நாவல்களின் மொழிபெயர்ப்பு. இதிலுல்ல "வெள்ளரி நிலத்தில் பிள்ளை பேறு", "நாற்பத்து ஒன்றாவது", "நூர்ஜஹான் பீவீ" போன்றவை மிக நல்ல நாவல்கள். இது இப்போது எங்கு கிடைக்குமென்று தெரியவில்லை.

5. பெரும்பாலும் எல்லா காமிக்ஸ் புத்தகங்களும்.பெரும்பாலும் எல்லோரையும் போல நானும் சிறு வயதிலிருந்தே இந்த புத்தகங்களின் ரசிகன். இப்போதும் பார்க்கும் போதெல்லாம் வாங்கி
படிப்பேன்.

6. பாலம் -ஸ்டாலின்கிராட் யுத்தம் பற்றிய நாவல்ஏழாம் வகுப்பில் பள்ளி நூலகத்திலிருந்து எடுத்து படித்தது. ஸ்டாலின் கிராட் சண்டையின் போது அருகிலிருந்த கிராமத்தை களமாக கொண்டு எழுதப்பட்ட நாவல். அந்த கிராமத்தினர் அங்கிருக்கும் ஒரு பாலத்தினின் வழியே ஜெர்மானியர் உள்ளே நுழையாமல் தடுப்பதை விவரிக்கும் புத்தகம். வெகு காலம் முன்பு படித்ததால் மற்ற விவரங்கள் நினைவில்லை. ஆனால் கதை மட்டும் இன்னும் நினைவில் உள்ளது.

காண விரும்பும் இடங்கள்.
1. நம்செங் கேம்ப் -- சயாம் மரண ரயிலில் வரும் இடம்
2. தக்னா பசார் அல்லது பாடாங் புசார் -- சயாம் மரண ரயிலில் வரும் இடம்.
3. பழைய தஞ்சையும், பழையாறையும் -- பொன்னியின் செல்வன் எபெக்ட்டுதான் வேறென்ன.
4. ருஷ்யாவின் ஸ்டெப்பி புள்வெளிகளின் அருகாமையில் உள்ள ஏதேனும் ஒரு கிராமம்.
5. சிம்லா
6. காஷ்மீர்

பிடித்த இடங்கள்
1. நான் பிறந்து வளர்ந்த எங்கள் ஊர்.
2. தாத்தா, பாட்டி வாழும் பக்கத்து ஊர்.
3. தஞ்சை பெரிய கோவில்.
4. ஊட்டி
5. ஆழ்ந்த அமைதியிலிருக்கும் இரவில் எல்லா ஊர்களும்
6. ஆரவாரமில்லா எல்லா கடற்கரைகளும்.

பிடித்த படங்கள்
1. என் பொம்முகுட்டி அம்மாவுக்கு
2. வேதம் புதிது
3. முதல் மரியாதை
4. மௌன ராகம்
5. ரோஜா
6. இதயத்தை திருடாதே.

பிடித்த பாடல்கள்
1. நீதானே என் பொன்வசந்தம் - நினைவெல்லாம் நித்யா
2. ராஜராஜ சோழன் நான் - இரட்டைவால் குருவி
3. குழலூதும் கண்ணனுக்கு - மெல்லத் திறந்தது கதவு
4. என் கண்மணி - சிட்டுக்குருவி
5. நீ ஒரு காதல் சங்கீதம் - நாயகன்
6. செல்லமே செல்லமே என்றாயடி - ஆல்பம்
[என்ன செய்றது. இப்பவெல்லாம் இதுபோல பாட்டு தான் பிடிக்குது. அதுவும் கடைசி பாட்டு loopல ஓடிகிட்டு இருக்கு. :-)]

பிடித்தவை ஆறு.
1. புத்தகங்கள்
2. குழந்தைகள்
3. நிசப்தமான நிலவொளியுள்ள இரவுகளில் ஊர் சுற்றுவது.
4. மூன்றாம் வகுப்பு இரயில் பயணங்கள்.
5. இணையத்தில் மேய்வது.
6. ஜவா நிரலியுடன் மணிக்கணக்கில் சண்டை போடுவது. (Esp. with NullPointer Exception :-))

இதுவரை எந்த சங்கிலிப்பதிவு எழுதியதில்லையாதலால் வெற்றி அழைத்ததும் ஏதேதோ எழுதலாமென்று தோன்றினாலும் எழுதுவதற்கு அதிக நேரம் ஒதுக்க முடியாததாலும் மற்றவர்கள் போட்டிருக்கும் அதே வழிமுறையில் நானும் போட்டுவிட்டேன். கீழே உள்ளவர்களையும் அழைக்கிறேன். இந்த நண்பர்களுக்கு சங்கிலி பதிவு பிடிக்காவிட்டால் எழுத வேண்டிய கட்டாயமில்லை. எழுதினால் மகிழ்வேன்(வோம்).

1. செந்தில் குமரன் (குமரன் எண்ணம்)
2. வடுவூர் குமார்
3. ஓசை
4. ராஜகுமார்
5. ஜெயபால்
6. பிரியமுடன் கேபி

13 Comments:

Blogger வடுவூர் குமார் said...

சோழ நாடான்
ஆமாங்க அதே வடுவூர் தான்.நீங்கள் அந்த பக்கமா?
பிறந்தது மட்டும் தான் அங்கே. படித்து சுத்தியது எல்லாம் நாகப்பட்டினம்.
ஆறு அழைப்புக்கு நன்றி.நாகை சிவா கூட கூப்பிட்டிருந்தார்.முயற்சிக்கிறேன்.

Huw Hul 06, 10:41:00 PM GMT-4  
Blogger senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

ரொம்ப நன்றிங்க சோழநாடான் உங்கள் பதிவுக்கு அதிகமாகக் கூட நான் வந்ததில்லை இருப்பினும் என்னையும் மதித்து ஆறு போட கூப்பிட்டதற்கு மிகவும் நன்றி. நெகிழ வைத்து விட்டீர்கள். நம்மளை யாரு கூப்பிடப் போறாங்கன்னு இதைப் பற்றி அதிகம் யோசிக்கலை. யோசிச்சு போடறேன்.

நம்ம செம்புலப் பெயல்னீரார்தான் ஞாபகத்துக்கு வரார்.

சயாம் மரண ரயில் படித்ததில்லை. படிக்க வேண்டும்.

நீதானே என் பொன் வசந்தம், நீ ஒரு காதல் சங்கீதம் எனக்கும் பிடித்த பாடல்கள்.

மூன்றாம் வகுப்பு ரயில் பயணங்களா? என்னாங்க சொல்றீங்க ஏதேனும் கதை இருக்க வேண்டுமே?

Huw Hul 06, 11:52:00 PM GMT-4  
Blogger வெற்றி said...

சோழநாடான்,
அழைப்பை ஏற்று ஆறுப்பதிவு போட்டதற்கு மிக்க நன்றி.அருமையாகவும் அழகாகவும் ஆறுப்பதிவு போட்டுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.சயாம் மரண ரயில் நாவலைப் படிக்க வேண்டும் போல் உள்ளது , உங்களின் பதிவைப் பார்த்ததும்.

Biy Hul 07, 01:50:00 AM GMT-4  
Blogger Muthu said...

வடுவூர் குமார்,
ஆமாங்க நானும் அந்த பக்கம் தான்.

Biy Hul 07, 02:31:00 AM GMT-4  
Blogger Muthu said...

குமரன்(எண்ணம்),
நான் உங்க பதிவை அவ்வப்போது படிப்பேன்க. என்ன ஒன்னு அப்பப்போ alt+tab போட்டு படிக்கிறதால பின்னூட்டங்கள் அதிகம் போடுவதில்லை. சயாம் மரண ரயில் கிடைச்சா படிங்க. நிறைய உண்மை சம்பவத்த வச்சு எழுதியிருந்தாலும் கொஞ்சம் சினிமாட்டிக்கா இருக்கும். ஆனாலும் ஏனோ எங்க வீட்டுல அம்மா, அப்பா, தங்கை எனக்கு எல்லொருக்கும் ரொம்ப பிடித்தது.

Biy Hul 07, 02:32:00 AM GMT-4  
Blogger Muthu said...

வெற்றி,
நன்றிங்க. சயாம் மரண ரயில் மேலே குமரனுக்கு சொன்னதுதான். கிடைச்சா படிங்க. என்னை பொருத்தவரை அது கொஞ்சம் டைடானிக் போல. அதாவது ஒரு பெரும் சோகத்திடையே முளைக்கும் மெல்லிய காதல். அது கொஞ்சம் உணர்வு பூர்வமாயிருக்கும். மத்தபடி பெரும்
இலக்கியமாவென்றெல்லாம் தெரியாது.

Biy Hul 07, 02:34:00 AM GMT-4  
Blogger முத்துகுமரன் said...

பாட்டுல நான். 4/6

6 பாட்ட முன்னாடி கேட்டுகிட்டு இருந்தேன். இப்ப விட்டுட்டேன் :-)

Biy Hul 07, 09:00:00 AM GMT-4  
Blogger PKP said...

சோழநாடன்,
நீங்கள் ஆறு சங்கிலியாலே தாக்கிட்டீங்களே? எப்படி பெரிய பெரிய பதிவெல்லாம் எழுதுரீங்களோ?.முயல்கிறேன்.என்னை ஆற்றோட விட்டதுக்கு நன்றி. :)

Biy Hul 07, 02:08:00 PM GMT-4  
Blogger Muthu said...

வாங்க முத்துகுமரன்,
என் அறையில் உள்ள நண்பரும் கிடடதட்ட என் நிலையில் தான் உள்ளார். எனவே அறையில் 6வதுதான் தொடர்ந்து ஓடுது. மத்ததெல்லாம் அவ்வப்போதுதான் :-)

Biy Hul 07, 04:58:00 PM GMT-4  
Blogger Muthu said...

நன்றிங்க வெற்றி,
நாலு இப்ப ஆறானது. அடுத்து என்னன்னு தெரியலை :-(

Biy Hul 07, 04:58:00 PM GMT-4  
Blogger Jeyapalan said...

சோழ நாடான்,
நீங்கள் அழைத்தபடி நானும் ஆறு போட்டுள்ளேன். நேரம் கிடைக்கும் போது சென்று பாருங்கள்.
அன்புடன்
ஜெயபால்

Lun Hul 24, 03:28:00 PM GMT-4  
Blogger Muthu said...

ஜெயபால்,
நன்றி. கொஞ்சம் வேலை அதிகமிருந்ததால் இந்த வாரம் வலைப்பதிவு பக்கம் வரவில்லை. இன்றுதான் பார்த்தேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

உங்கள் ஆறு அருமையாக உள்ளது. உங்கள் முதல் விருப்பம் நன்றாக உள்ளது. நிறைவடைந்தால் நன்றாகத்தானிருக்கும்

Huw Hul 27, 08:48:00 PM GMT-4  
Anonymous Hindi-nagpakilala said...

thanks for your comments. i forward it to my friends. - anbudan, suma.

Lin Ago 20, 11:51:00 PM GMT-4  

Mag-post ng isang Komento

<< Home

Biyernes, Hunyo 30, 2006

14. ஒரு தற்கொலையும், துரத்தும் நினைவுகளும்

அன்று கல்லூரி விடுமுறையில் வீட்டில் இருந்த சமயம் அந்திசாயும் நேரத்தில் ஒரு கூக்குரல் கேட்டது. சிறிது நேரத்தில் ஒன்று சிலவாகவும் பின்னர் பலவாக பலமாகவும் ஆனது. சட்டென சட்டையை மாட்டிக்கொண்டு ஓடினேன். அவன் நினைவிழந்து கிடந்தான். சற்றே தூக்கலான மது வாசனையும், கொஞ்சம் போல வயலுக்கு தெளிக்கும் பூச்சிமருந்து வாசனையும் வீசியது.

விழுந்து கிடந்தவன் துவக்கப் பள்ளி முழுவதும் என்னுடனே படித்தவன். தந்தை சிறுவயதிலேயே இறந்து விட்டதால் பெரும்பாலும் கட்டுப்பாடற்றே வளர்ந்து வந்தான். 30 அடி ஆழ கிணற்றில் குதிப்பதும், தென்னை மரத்திலேறி கிளி, பொன்வண்டு பிடிப்பதுவுமாக சிறுவயதுகளில் சக வயது தெருப்பையன்களின் ஆதர்சனமாகவே இருந்தான். வீட்டிலிருந்து கடிகார முள்ளைக் கட்டிகொண்டு நாங்கள் விளையாட வரும் போது அவன் மட்டும் மணிக்கணக்கில் ஆற்றில் நீச்சலடிப்பான். அதுவும் எனக்கு பம்பரம் கற்று தந்ததிலிருந்து, இரகசியமாய் என்னை ஆற்றுக்கு நீச்சலடிக்க, மீன்பிடிக்க அழைத்து போவது வரை அவனேதான் செய்வான்.

துவக்கப்பள்ளி முடிந்ததும் வெவ்வேறு பள்ளிகளுக்கு சென்று விட்டதால் தொடர்புகள் அருகிவிட்டன. சேர்ந்து ஊர்சுற்றுவது கோடை விடுமுறைகளோடு முடிந்து விட்டது. அதுவும் பத்தாம் வகுப்பு வந்ததிலிருந்து முடிவுக்கு வந்தது. அப்போதெல்லாம் எங்கள் பக்கங்களில் கிரிக்கெட் சிறிய அளவில் இருந்தாலும் பிரசித்தி பெற்ற விளையாட்டுக்கள் கபடியும், கைப்பந்தும் தான். ஊருக்கு ஒரு அணி கைப்பந்திற்கென்று இருந்தால், தெருவுக்கு ஒன்று கபடிக்கென்றிருக்கும். சில சமயம் சண்டையால் பிளவுபட்டு தெருவுக்கு இரண்டு, மூன்று கூட இருக்கும். இவனுக்கு படிப்பில் எந்த முன்னேற்றமில்லாவிட்டாலும் கபடி விளையாட்டில் பெரும் பேர் கிடைக்க ஆரபித்தது. ஆள் ஒல்லியாக இருந்தாலும் வியூகம் வகுப்பதிலும் உடைப்பதிலும் தேர்ந்திருந்ததால் வெகு வேகமாக எல்லோருக்கும் தெரிந்தவனானான். அவனுக்காக தனி வியூகங்களை எதிரணியினர் வகுக்கும் அளவிற்கு ஆனான்.

கபடிக்காக சுற்றியதில் ஒவ்வொரு வகுப்பும் தாண்டுவது அவனுக்கு பெரும்பாடாகவிருந்தது. ஒருவழியாக அவன் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியபோது நான் கல்லூரியில் நுழைந்திருந்தேன். அந்த பத்தாம் வகுப்பு தேர்வை மூன்று வருடங்கள் திரும்ப திரும்ப எழுதியும் 2 பாடங்கள் தான் முடித்திருந்தான். மாவட்ட மற்றும் மாநிலத்துக்கு விளையாட பத்தாம் வகுப்பு முடித்தே ஆக வேண்டியிருப்பதால் "வேறு" வழிகளில் முடிக்க முயற்சிப்பதாக மற்ற நண்பர்கள் சொன்னார்கள். கூப்பிட்டு "ஏதாவது டியூஷன் போயாவது படியேண்டா" என்றால் சிறு சிரிப்பும் வாத்திகளுக்கு நாலு வசவும் தான் பதிலாக வரும். இந்த கால கட்டங்களில் அவ்வப்போது நாங்கள் கைப்பந்து விளையாடும்போது வந்து கலந்துகொள்வான் ஆனாலும் அவனுக்கு சகவாசம் பெரும்பாலும் "பெருசுகளுடன்" ஆகியிருந்தது.

இப்படியான நேரத்தில் யாரிடமோ பத்தாம் வகுப்புக்காக பாஸ் செய்ய பத்தாயிரம் வரை பணம் கொடுத்து ஏமாந்ததாகவும், திருப்பி கேட்கையில் கடைத்தெருவில் சண்டை வலுத்ததாகவும் சண்டையின்போது அடிவாங்கிய எதிராளி அவன் அம்மாவையும், சித்தியையும்(அவன் அப்பாவுக்கு இரு மனைவிகள்) கேவலமாக திட்டியதாகவும் அதனால் பிராந்தியில் விஷம் கலந்து குடித்ததாகவும் பின்னர் தெரியவந்தது.

இதற்குள் நிலமை புரிந்து மருத்துவமனைக்கு 2 கி.மீ செல்லவேண்டுமாதலால் பக்கத்து வீட்டிலிருந்த பைக்கை எடுத்து வர ஓடினேன். அவன் அம்மாவும் மற்றும் சிலரும் உப்புத்தண்ணீரும், வேறு ஏதோவும் கொடுத்து வாந்தியெடுக்க வைத்துக்கொண்டிருந்தனர். வேகமாக வண்டியை எடுத்து வந்து நிறுத்தினேன். சிலர் தூக்கி பைக்கில் உட்காரவைக்க அவனுக்கு பின் இன்னொருவர் உட்கார்ந்து பிடித்துக்கொண்டார். என்மேல் சாய்ந்து கிட்டதட்ட தொங்கிக்கொண்டே வந்தான். வேகமாக செல்கையில் பாதிவழியில் சில வினாடிகள் சுயநினைவு வந்தது. சுயநினைவு வந்ததும் என்னை விளித்து "டேய் நான் சாக போறேன். பொழைக்க வைக்க பாக்குறியா" என்று சிரித்தபடி மீண்டும் சுயநினைவிழந்தான். இப்போது அவன் உடல் அசாதாரணமாய் முறுக்கேறி என் முதுகை பிடித்து அழுத்த நான் வண்டியின் மேல் கிட்டதட்ட படுத்து விட்டேன். அந்த நாட்களில் நான் அவனை விட கொஞ்சம் பலமானவன்தான். சாதாரணமாக அப்படி அழுத்தினால் என்னால் தாக்குபிடிக்க முடியும். ஆனால் இப்போதைய பிடி அசுர பலத்தில் இருந்தது. ஆனாலும் விடாமல் தலையை மட்டும் தூக்கிய பாதையை பார்த்த படி ஹாரனை அழுத்திக்கொண்டே வண்டியை விரட்டிக்கொண்டிருந்தேன். பின்னால் பிடித்துக்கொண்டிருந்த அண்ணனோ அவனைப் அடக்கி பிடிக்க போராடிக்கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து மெதுவாக உடல் தளர்ந்தது.

ஒருவழியாக பத்து நிமிடங்களில் மருத்துவரிடம் கொண்டு சென்று சேர்த்தோம். நான் குடம் முழுக்க தண்ணிரோடு தலைக்கு மேல் பிடித்துக்கொள்ள மருத்துவர் மெல்லிய நீண்ட குழாயின் ஒரு முனையை வாய் வழியே அவன் வயிறு வரை விட்டார். மறுமுனை குடத்தில் உள்ள தண்ணீரில் மூழ்கியது. குழாய் வழியே தண்ணீர் சென்று வயிற்றை சுத்தம் செய்து வாய்வழியே வந்தது. அதன் துர்நாற்றமே தாங்க முடியாமல் இருக்க, சிறிது நேரத்தில் மலமும் சிறுநீரும் வெளியானதும் அருகிலிருந்த நாங்கள் இருவரும் வாந்தியெடுக்கும் நிலைக்கு வந்தோம். இன்னும் அரைமணி நேர பெரும் போராட்டத்துக்குப்பிறகு மருத்துவர் கையை விரித்து விட்டு தஞ்சாவூர் பெரிய மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல சொன்னார். அதற்குள் தெருவிலிருந்த ஏராளமானோர் வந்து விட அங்கிருந்த ஒரு காரில் அவனை ஏற்றினோம். நானும் இன்னொருவரும் தூக்கியபோதே அவன் உடல் லேசாக வெட்டியிழுக்க மொத்தமாக வியர்த்துப்போனேன். அதன்பிறகு அங்கு நிற்கவும், காரில் தஞ்சை செல்லவும் என்னால் முடியாமல் வீட்டிற்கு திரும்பிவிட்டேன்.

ஆனால் நான் வந்து சில நாழியில் "அதுவும்" திரும்பிவந்தது. கூடவே சுற்றி திரிந்த ஒருவன் என் கைகளில் இறந்ததும், அவன் கடைசியாய் பேசியது என்னுடன் என்ற நினைவு துரத்தவும் திரும்ப போய் "அதை" பார்க்க திராணியில்லாமல் என் அறையில் அப்போது சென்று நுழைந்தவன் அடுத்தநாள் மதியம் "காரியம்" முழுவதும் முடிந்தபின் தான் வெளியே வந்தேன். ஆனால் அன்றைய அதிர்வு பலவருடங்களாய் என்னுள் இருக்கிறது.

17 Comments:

Blogger பொன்ஸ்~~Poorna said...

சோழ நாடன், இந்த மாச தேன் கூடு போட்டிக்கு இப்போ தாங்க தலைப்பு அறிவிச்சாங்க.. அதுக்குள்ள!!

பயங்கரமாத்தான் இருக்கு..

Biy Hun 30, 10:12:00 PM GMT-4  
Blogger ilavanji said...

போட்டிக்கு போட்டுருங்க!

அப்படின்னா, கலந்துக்கற மொத ஆள் நீங்கதான்னு நினைக்கறேன்! :)

Biy Hun 30, 10:16:00 PM GMT-4  
Blogger Muthu said...

பொன்ஸ்,
இது போட்டிக்காக எழுதல. முன்பே ஒருவர் தொலைக்காட்சி நடிகையின் தற்கொலையைப் பற்றி எழுதியபோது இதையும் எழுத வேண்டுமென்று தோன்றியது. நீண்டவாரயிருதியாச்சேன்னு இன்னைக்கு மதியத்திற்கு பிறகே யாரையும் இங்க காணும். (திங்கள் முக்கல்வாசி தலைங்க விடுப்பு சொல்லிட்டாங்க). கிட்டதட்ட ஒரு மாசத்துக்கு அப்புறம் இன்னைக்குதான் freeயா விட்டிருக்காங்க அதான் உட்கார்ந்து எழுதிட்டேன். போட்டிக்கு அனுப்பும்படியிருந்தா சொல்லுங்க அனுப்பிடுவோம்.

இளவஞ்சி,
கலந்துக்கும்படியிருக்கா(உங்க தலைப்புக்கு ஏற்றபடி இருக்கா) சொல்லுங்க, அனுப்புவோம்.

Biy Hun 30, 10:57:00 PM GMT-4  
Blogger நிலா said...

கனமா இருக்குங்க...

Sab Hul 01, 12:07:00 AM GMT-4  
Blogger நாமக்கல் சிபி said...

போட்டிக்கு அனுப்புங்க சோழ நாடன்!

Sab Hul 01, 12:13:00 PM GMT-4  
Blogger Muthu said...

தேன்கூடு போட்டிக்கு அனுப்புவதால் பின்குறிப்பாக போட்டதை மட்டும் வெட்டி இங்கே ஒட்டியிருக்கின்றேன்.

[எழுதி முடித்து திரும்ப படித்துப்பார்க்கையில் நான் சொல்ல நினைத்த உணர்வுகளில் வெகு குறைவாகவே காட்டியிருப்பதாக நினைக்கிறேன். ஆனாலும் திரும்ப எழுத உட்கார்ந்து அந்த நினைவுச்சுழலில் மாட்ட விரும்பாத்தால் இப்படியே விட்டு விடுகிறேன்.]

Lun Hul 03, 02:35:00 PM GMT-4  
Blogger Muthu said...

நிலா
வருகைக்கு நன்றி,

சிபி,
நாமும் கலந்துகிட்டாச்சு.

Lun Hul 03, 02:36:00 PM GMT-4  
Blogger கதிர் said...

உற்சாகமா படிக்க ஆரம்பிச்சேன் கடைசில உருக்கமா ஆகிடுச்சி
அப்படியே கதையா மாத்தி இந்த மாத போட்டிக்கு அனுப்பிடுங்க சோழா

அன்புடன்
தம்பி

Lun Hul 03, 04:54:00 PM GMT-4  
Blogger வெற்றி said...

சோழநாடான்,
நல்ல கதை.

பி.கு:- உங்களை ஆறுப்பதிவுக்கு அழைத்திருக்கிறேன். அழைப்பை ஏற்றுக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

Lun Hul 03, 09:05:00 PM GMT-4  
Blogger ilavanji said...

// கலந்துக்கும்படியிருக்கா(உங்க தலைப்புக்கு ஏற்றபடி இருக்கா) சொல்லுங்க, அனுப்புவோம் //

இப்படியெல்லாம் கேக்கப்படாது! :) ஒரு மரணத்தின் அருகாமையை அருமையா படம் புடிச்சிருக்கீங்க!

மடமடன்னு அனுப்பிவையுங்க...

Lun Hul 03, 10:34:00 PM GMT-4  
Blogger Muthu said...

தம்பி,

இது உண்மையாக நடந்தது. அதனால்தான் பின்குறிப்பில் "திரும்ப எழுத உட்கார்ந்து அந்த நினைவுச்சுழலில் மாட்ட விரும்பாத்தால் இப்படியே விட்டு விடுகிறேன்" என்று எழுதியிருந்தேன். அன்று அவனைக் காப்பாற்ற எவ்வளவோ முயன்றும் முடியாமல் போனதன் வலி வெகு காலம் இருந்தது. அதைவிட அவன் மரணிக்கும் போது என் கைகளில் தூக்கியிருந்தேன் என்ற நினைவு இன்னும் உள்ளது. எனவே இதை கதையாக அனுக இபோதைக்கு என்னாலாகாது. பல வருடங்கள் கழித்து வலியில்லா சாதாரன நிகழ்வாக என்னுள் மாறும் போது வேண்டுமானால் இது நடக்கலாம். அதனால் போட்டிக்கு அப்படியே அனுப்பிவிட்டேன்.

Miy Hul 05, 04:01:00 PM GMT-4  
Blogger Muthu said...

வெற்றி,
அழைப்பிற்கு நன்றி. கொஞ்சநாளாய் வேலை மென்னியைப் பிடிக்கிறது. இந்த வாரயிறுதியில் பதிவாயிட முயற்சி செய்கிறேன்.

Miy Hul 05, 04:01:00 PM GMT-4  
Blogger Muthu said...

இளவஞ்சி,
வரவுக்கு நன்றி. அனுப்பிவிட்டேன்.

Miy Hul 05, 04:01:00 PM GMT-4  
Blogger பொன்ஸ்~~Poorna said...

சோழநாடன்,
திரும்பி வரத் தாமதமாகிடுச்சு.. போட்டிக்கு ஏத்த ஆக்கம் தானுங்க.. சந்தேகம் வேறயா?:) அனுப்பின வரைக்கும் நல்லது..

இந்த நினைவுச் சுழல் பத்தி சொன்னது ரொம்பச் சரி.. ஒரு மரணத்தைக் அருகே பார்க்கிறதே ரொம்ப பயங்கரம் தான்.. அதிலும் கைலயே தூக்கி இருந்தது... இதுவே கனமாத் தாங்க இருக்கு..

காரணம் தெரிவிக்காமல் மரணமடைந்த நண்பன் ஒருவனின் நினைவு தினம் அடுத்த வாரம் வருது. அன்னிக்கு அரை மணி நேரம் அவனுடன் செலவிட்டிருந்தால் இன்று உயிரோட இருந்திருப்பானோன்னு இப்போவும் நினைச்சிக்குவோம்.... நானும் சுழலுக்குள்ள போக விரும்பலை. இதோட நிறுத்திக்கிறேன்.

Miy Hul 05, 06:31:00 PM GMT-4  
Blogger Muthu said...

பொன்ஸ்,
வருகைக்கு நன்றி.
உங்கள் நண்பருக்கும் என் ஆழ்ந்த அஞ்சலிகள்.

Huw Hul 06, 01:22:00 AM GMT-4  
Blogger senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

///
ஆனால் நான் வந்து சில நாழியில் "அதுவும்" திரும்பிவந்தது
///

படிக்கும் எனக்கே ஒரு மாதிரி இருக்கு நேரில் அனுபவித்த உங்களுக்கு அப்பா..... போட்டிக்கு வாழ்த்துக்க்கள்.

Biy Hul 07, 01:03:00 AM GMT-4  
Blogger Muthu said...

ஆமாங்க குமரன்(எண்ணம்),
கொஞ்சம் கஷ்டமான ஒன்றுதான்.

Biy Hul 07, 02:37:00 AM GMT-4  

Mag-post ng isang Komento

<< Home

Biyernes, Hunyo 09, 2006

13. காத்திருக்கவேணும்


சுட்டும் விழிச்சுடர் தான் - கண்ணம்மா!
        சூரிய சந்திரரோ?
வட்டக் கரிய விழி - கண்ணம்மா!
        வானக் கருமை கொல்லோ?
பட்டுக் கருநீலப் - புடவை
        பதித்த நல் வயிரம்
நட்ட நடு நிசியில் - தெரியும்
        நஷத் திரங்க ளடீ!
சோலை மல ரொளியோ - உனது
        சுந்தரப் புன்னகை தான் ?
நீலக் கடலலையே - உனது
        நெஞ்சி லலைக ளடீ!
கோலக் குயி லோசை - உனது
        குரலி னிமை யடீ!
வாலைக் குமரி யடீ - கண்ணம்மா!
        மருவக் காதல் கொண்டேன்.
சாத்திரம் பேசு கிறாய் - கண்ணம்மா!
        சாத்திர மேதுக் கடீ!
ஆத்திரங் கொண்டவர்க்கே - கண்ணம்மா!
        சாத்திர முண்டோ டீ!
மூத்தவர் சம்மதியில் - வதுவை
        முறைகள் பின்பு செய்வோம்;
காத்திருப் பேனோடீ? - இதுபார்.
        கன்னத்து முத்த மொன்று!

2 Comments:

Blogger Unknown said...

புரியுதுங்கோ.....;-)

Lin Hun 18, 08:58:00 PM GMT-4  
Blogger siva gnanamji(#18100882083107547329) said...

முண்டாசுக் கவிராயரை நினைவூட்டியமைக்கு நன்றி

Sab Hul 01, 12:02:00 AM GMT-4  

Mag-post ng isang Komento

<< Home

Martes, Hunyo 06, 2006

12. மதுமிதா அவர்களின் ஆய்வுக்காக,


வலைப்பதிவர் பெயர்: சோழநாடன்
வலைப்பூ பெயர்: தேடலின் பாதையில்
சுட்டி(url) : http://www.chozanaadan.blogspot.com/
ஊர்: சியாட்டல் (நாமெல்லாம் வெக்கிடையாட்டு கூட்டம் போல ஊர் ஊராய் சுற்றும் மென்பொருள் ஆசாமி. இப்போது இருப்பது சியாட்டல்)
நாடு: அமெரிக்கா
வலைப்பூ அறிமுகம் செய்தவர்: ஆங்கில வலைப்பதிவை பற்றி முன்பே தெரிந்தாலும் தமிழ் வலைப்பதிவுகளைப் பற்றி 2003 ஜூனில் பத்ரியின் மூலம் அறிமுகம் கிடைத்தது. அன்றிலிருந்து இன்று வரை பெரும்பாலும் தொடந்து கொண்டே வருகின்றேன். ஆரம்பத்தில் கிட்டத்தட்ட அனைத்தையும் படிப்பேன். இப்போது நேரம் கிடைக்கையில் முடிந்தவற்றை பற்றி மட்டுமே படிக்கிறேன்.
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம்: ஜூன் 21, 2005 ல்
இது எத்தனையாவது பதிவு: 12
இப்பதிவின் சுட்டி(url): http://chozanaadan.blogspot.com/2006/06/12.html
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: முதலில் பின்னூட்டமிடுவதற்காக மட்டுமே ஆரம்பித்தேன். பிறகு அவ்வப்போது கொஞ்சம் எழுதவும் செய்கிறேன். இப்படியும் சொல்லலாம்- இது என் இலக்கற்ற பயணத்தில் கடந்தவைகளும், உள்ளே சூல்கொண்டவைகளும் விட்டுச் சென்ற சுவடுகளின் பதிவுகளுக்கும், சூழலின் மீதான பிம்பங்களின் பிரதிபலிப்பிற்கும்.
சந்தித்த அனுபவங்கள்: நீண்ட காலமாய் என்னுள் இருந்த பல பார்வைகள் மாறியிருக்கின்றன. நல்ல புத்தகங்களின் அறிமுகம் நிறைய கிடைத்திருக்கிறது.
பெற்ற நண்பர்கள்: நண்பர்கள் என்று சொல்லமுடியாது. ஆனால் பல நல்ல அறிமுகங்கள் கிடைத்திருக்கின்றன.
கற்றவை: சில சமயம் கோபத்தில் சட்டென தெரித்து விழும் வார்த்தைகளை கட்டுபடுத்த இங்குதான் கற்றுகொண்டேன்.
எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: அவசியமான அதேசமயத்தில் அபாயகரமான முழு சுதந்திரம். {அதுவும் சில நேரங்களில் சிலரிடம் சுட்டி கொடுக்கும் வரைதான்:-)}
இனி செய்ய நினைப்பவை: படித்துக்கொண்டிருப்பதைவிட இப்போதைக்கு எந்த திட்டமும் இல்லை. முடியும்போது ஏதாவது எழுதலாம்.
உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:சொல்லிக்கொள்ளும் அளவில் பெரிதாக ஒன்றுமில்லை. http://chozanaadan.blogspot.com/2006/01/1.html இந்த சுட்டியில் என்னைப் பற்றிய சிறு அறிமுகம் கிடைக்கும்.
இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:
சுயதம்பட்டம் அடிக்க வாய்ப்பு தந்ததற்கு நன்றி. உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

2 Comments:

Blogger Unknown said...

என்ன சோழநாடன், நிறைய உள்குத்து வெச்சு எழுதியிருக்கீங்க. 'எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்' இதுக்கெல்லாம் அர்த்தம் என்ன? ;-)

{அதுவும் சில நேரங்களில் சிலரிடம் சுட்டி கொடுக்கும் வரைதான்:-)}

நீண்ட காலமாய் என்னுள் இருந்த பல பார்வைகள் மாறியிருக்கின்றன.

Mar Hun 06, 08:07:00 PM GMT-4  
Blogger Muthu said...

{அதுவும் சில நேரங்களில் சிலரிடம் சுட்டி கொடுக்கும் வரைதான்:-)}

இதுக்கு அர்த்தம் உங்களுக்கு நல்லாவே தெரியுமே :-) .
(தலை, வீணா வாயை கிளரி மாட்ட வைக்காதீங்க:-). )

Mar Hun 06, 11:27:00 PM GMT-4  

Mag-post ng isang Komento

<< Home

Martes, Mayo 23, 2006

11. முகில்களின் மடியில்



இன்னும் என்னுள்
எதிரொலிக்கும்
உன் குரல், மெல்ல
எனை
நிரப்பியிருக்கிறது.

விசிறியடித்த
வெண்பஞ்சு பொதிகளின்
மேலாக
கைகோர்த்த படி
மிதந்து கொண்டிருக்கிறோம்
நாம்.

சலனமே இல்லா
நதிபோல
ஓடிக்கொண்டிருக்கிறது
என் எண்ணங்கள்
உன்னை மட்டும்
சுமந்த படி.

நேர அட்டவணைகளையெல்லாம்
புறங்கையால் தள்ளி
இரக்கமில்லாமல்
ஆக்கிரமிக்கிறாய்
என்னை.

இதுவே வெறும்
ஆரம்பம்தான்
போக வேண்டியது
எவ்வளவோ
மீதமுள்ளது.

எப்போதும்
எந்நிலையிலும்
என்னோடிருப்பாய்
என்ற எண்ணமே
என்னை வழிநடத்துகிறது.

கண்ணம்மா,
நமது நெடும்
பயணத்திற்கு தயார்படுத்து
உன்னோடு என்னையும்
சேர்த்து.

3 Comments:

Anonymous Hindi-nagpakilala said...

hi chozhanaadan,

kavithai super. ungalukkum unga kannammavirkkum en vaazhthukkal...

Huw May 25, 09:12:00 AM GMT-4  
Anonymous Hindi-nagpakilala said...

hi chozhanaadan,
kavithai superp.... ungalukkum, unga kannammavirkkum en vazhthukkal

Huw May 25, 09:14:00 AM GMT-4  
Blogger Muthu said...

நன்றி Anonymous.
அண்ணே,
யாருண்ணே நீங்க. பாராட்டிதானே எழுதியிருக்கீங்க. பெயரையும் சொல்லலாமே.

Biy May 26, 03:05:00 PM GMT-4  

Mag-post ng isang Komento

<< Home

Miyerkules, Mayo 03, 2006

10. மறுமொழி மட்டுறுத்தலும், தீர்வுக்கான முயற்சியும்

அன்னியன் அவர்களது blog firewall பற்றிய பதிவை படித்தேன். நானும் இதேபோல் ஒன்றை மறுமொழி மட்டுறுத்தலை கட்டாயமாக்கிய போது அதற்கு தீர்வாக முயற்சி செய்தேன். ஆனாலும் சில தொழில்நுட்ப காரணங்களாலும், தங்கை திருமணத்திற்கு இந்தியா செல்ல வேண்டியிருந்ததாலும் அதை அப்படியே குப்பையில் போட்டு விட்டேன். மேலும் இங்கேதான் தொழில்நுட்பத்தில் பெரிய தலைங்க எல்லாம் இருக்கே அவங்களாலெயே முடியல போல அதான் யரும் இதை பத்தி பேசலன்னு விட்டுட்டேன். இப்போது அன்னியன் பதிவை பார்த்தவுடன்தான் இதே விஷயத்தை பல பேர் முயற்சி செய்கிறார்கள் என்று தெரிகிறது. எனவே நான் எதுவரை வந்துள்ளேன் என்பதை போட்டால் இதை தொடர நினைப்பவர்களுக்கும் பயன்படும் என்பதால் நான் முடித்தவரை விவரிக்கின்றேன். முடிபவர்கள் தொடரலாம்.

நான் என் நிரல் பின்வருமாறு வேலை செய்ய வேண்டுமென்று விரும்புகிறேன்.
நிரல்

1. if the user id exists in Whilte list it should allow the user to comment directly. (it will appear in the blog immediately)
2. else it will send the comment for moderation.
3. all Anonymous and Other user's comment directly goes to moderation.
பார்க்க படம்:



இதில் முதலாவது javascript மூலம் எளிதில் முடிந்துவிட்டது. இதற்கு KVR கொடுத்திருந்த பின்னூட்டபெட்டியை பயன்படுத்தினேன்.
2 வதும் 3 வதும் முடியவில்லை. காரணம் இதற்கு ஏதேனும் server side நிரல் தேவை. எனக்கு JSP,Servletல் இதற்கு நிரல் எழுத முடியுமென்றாலும் அதை host செய்யும் server கிடைக்கவில்லை. உண்மையில் அதிகம் தேடவில்லை. இந்திய பயணத்திற்கான முன்னேற்பாடுளில் இறங்கிவிட்டதால் பாதியில் விட்டுவிடேன்

இதிலுல்ல குறைபாடு ஒவ்வொரு bloggerஉம் தனித்தனியே ஒரு JSP கோப்பை மின்னஞ்சல் அனுப்பும் வசதியுள்ள வழங்கியில் போட்டு வைக்க வேண்டும். சரி இதைக் களையவேண்டுமானால் நிரலை பொதுவாக எழுதி தமிழ்மணம் போன்ற ஒரு வழங்கியில் பொதுவில் போடலாம். இதிலும் ஒரு பிரச்சனை என்னவென்றால் ஏராளமான மறுமொழிகள் வருவதால் நிறைய மறுமொழிகளை கையாளவேண்டும் மேலும் நிறைய மின்னஞ்சல்களை அனுப்பவேண்டும். இதற்கு ஏராளமான banwidth தேவப்படும். அனைத்தையும் தனிநபர் இலவசமாக செய்யமுடியுமாவென்று தெரியவில்லை. இதுகுறித்து மேலதிக தகவல் தெரிந்தவர்களும் வேறு வழிமுறை தோன்றுபவர்களும் சொல்லுங்கள். மேலும் முயற்சி செய்ய நானும் உங்களோடு வருகிறேன்.

சரி யாஹ¥ 360 போல் நாம் விரும்புபவர் மட்டும் மறுமொழியிட வேண்டுமென்றால் javascriptன் மூலம் எளிதாக செய்யலாம்.
அன்னியன் பயன்படுத்துவதுபோல் தனி js கோப்புகொண்டும் செய்யலாம்(அன்னாத்தே அன்னியன் view source பாத்தாலே எல்லாம் தெரியுது. இதுல என்ன ரொம்ம பீலா:-))))) ). இல்லையேல் KVR ன் பின்னூட்டப்பெட்டியின் நிரலில் AddName methodல் ஒரு if blockஐ சேர்ப்பதன் மூலமும் செய்யலாம். ஆனால் எனக்கு இது பிடிக்காததால் இதை என் பதிவில் பயன்படுத்தவில்லை(ஆமா பின்ன வர்ர கொஞ்ச பின்னூட்டத்தையும் இதுபோல ஏதாவது செஞ்சு விரட்ட முடியுமா?:-)) ). வேறு யாருக்கும் தேவையெனில் சொல்லுங்கள் செஞ்சுடுவோம்.

4 Comments:

Blogger மாயவரத்தான் said...

அன்னியன் என்ன பீலா அப்படின்னு கேக்குறதே தப்பு! என்ன தான் நொண்டிச்சாக்கு சொன்னாலும் உங்களால முடியாம கைவிட்ட ஒண்ணை வெற்றிகரமா இன்னொருத்தர் இப்போ செஞ்சிருக்காரே. அதை பாராட்டுறதை விட்டுட்டு, கருணாநிதி டைப்பிலே 'இத நான் அன்னைக்கு சொன்னேன்/செஞ்சேன்'அப்படீன்னு சொல்றது சரியல்ல வாத்யாரே.

Miy May 03, 06:52:00 PM GMT-4  
Anonymous Hindi-nagpakilala said...

அன்னியன் என்ன பீலா அப்படின்னு கேக்குறதே தப்பு! எ�

Miy May 03, 06:58:00 PM GMT-4  
Blogger Muthu said...

மாயவரத்தாரே!
அவர்
///
மாயவரத்தான், தொழில் ரகசியங்களை வெளியிடக்கூடாது ;)
///
இப்படி சும்மா கிண்டலாக சொன்ன அதே தொனியில்தான் நானும் சொன்னேன். வேறு எந்த நோக்கமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் இது விஷயத்தில் இணைந்து செயல்பட தயாராகவே இருக்கிறேன்.

தல அவரு செய்ததைப் பற்றி நான் தவறாக எதுவும் சொல்லவில்லை. அதை மேலும் மேம்படுத்துவதற்கான யோசனையாகவே இப் பதிவைப் போட்டேன்.

Miy May 03, 06:59:00 PM GMT-4  
Blogger Unknown said...

cholanaadan,

Since I am here, let me ask the question that I wanted to ask long back. Here, the user id that you were planning to use is Blogger user id? Were you planning to ask ppl to enter their user id? And the whitelist will be a collection of all blogger user ids? Please reply to rarunach@gmail.com

Lin Hun 18, 09:07:00 PM GMT-4  

Mag-post ng isang Komento

<< Home